You are here

வசந்தி என்றொரு பெண்ணின் வாழ்க்கைச் சரிதம்

பி. சுகந்தி தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்களின் மானவி என்ற நாவல் ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தலைப்பில் கௌரி கிருபானந்தன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாவலைப் படிக்க விரித்தால் படித்து முடிக்காமல் மூட மனமில்லை. வாசிப்பை வேகமாக்கும் எழுத்து நடையும் கதை அம்சமும் நிறைந்துள்ள நாவல். முதல் பாதியைப் படித்துமுடிக்கும் போது சின்னத்திரையில் பார்க்கும் மெகா சீரியல் போல கதையில் அடுத்தடுத்த பகுதியைத் தெரிந்து கொள்ள மனம் ஆவல் கொள்கிறது. கதையின் கதாநாயகி வசந்திக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்தவள் லாவண்யா, தன் தாயைப் போலவே கணவன், வீடு, மாமியார், குடும்பம் என உலகையே வீட்டிற்குள் சுருக்கிக் கொண்டவள், இளையவள் சவிதா வைசாக்கில் இஞ்சினியரிங் படிப்புடன் மாணவர் சங்கத் தலைவியும் கூட. சவிதா தன்னம்பிக்கையான பெண் ஆதலால், பட்டப்படிப்பை முடித்து விட்டு, கிணற்றுத் தவளையாய்…

Read More

வஞ்சகன் கண்ணனடா… தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்

சு.பொ.அகத்தியலிங்கம் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” என்பது பெயர் மட்டுமல்ல இந்நாவலின் மைய இழையே அதுதான். மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள கிருஷ்ணன் என்றொரு கடவுள் அவதாரக் கற்பிதத்தை  பிம்பத்தை உடைத்தெறிவதுடன் கிருஷ்ணன் இறந்துவிட்டான் என அறிவிக்க மகா துணிச்சல் வேண்டும். போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. வலுவான செய்திகள் நிகழ்வுகளூடே வாசிப்பவன் நெஞ்சில் பதிய வைக்கவேண்டும். ஏற்கச்செய்ய வேண்டும். இதில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார். “அல்லும் பகலும் அனவரத நேரமும் ஊண், உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடலிலும் நிலத்திலும் ஓயாமல் உழைத்துத் துவாரகைச் செல்வம் கொழிக்கச் செய்யும் யாதவர்கள் ஓய்வு சாய்வாக கொஞ்சம் மதுவோடு உறவாடுவதில் தவறொன்றுமில்லை என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுநெறியாக இருந்த மது நெறி இன்று மது வெறியாக மாறி, ஒப்பற்ற இனத்தின் பேரழிவுக்கு மூலகாரணமாகிவிட்டது  என முதல் அத்தியாயத்தில் கடல்விழா கொண்டாடி துவாரகை மக்கள் மது…

Read More
நூல் அறிமுகம் 

எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம்

கேசவமணி வாழ்க்கையில் பிறர் நமக்குச் செய்யும் அவமானங்களும், துரோகங்களும் வலி நிரம்பியவைதான்  என்றாலும், அவைகள் புறக்கணிப்பின் துக்கத்தைப் போல அவ்வளவு வலி நிறைந்ததல்ல. நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் புறக்கணிப்பின்  துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனாலும், காது கேளாதவனின் புறக்கணிப்பின் துக்கத்தை நாம் ஒரு போதும் உணர முடியாது. அதை அந்த உலகத்தில் இருப்பவர்களால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தேவராஜ் எனும் காது கேளாத மனிதனின் துக்கத்தை, வலியை, வேதனையை எஸ்.ராமகிருஷ்ணன் உணர்வுப்பூர்வமாகவும், கலாபூர்வமாகவும்  அற்புதமாகச் சித்தரித்த நாவல்தான் நிமித்தம். அவர் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வாசிப்பனுபவத்தைத் தருபவை. அவ்வாறே நிமித்தமும் புதியதோர் உலகத்துக்குள் நம்மை நடமாட வைக்கிறது. 47 வயதில் திருமணம் செய்துகொள்ளும் தேவராஜ் அடுத்த நாள் முகூர்த்தத்திற்காகக் காத்திருக்கிறான். நண்பர்கள் யாரும் இதுவரை வந்துசேரவில்லை என்பது அவனுக்கு…

Read More