You are here
அஞ்சலி 

மரணமில்லா எழுத்து

-சா. கந்தசாமி    தமிழ் நவீன புனைகதை இலக்கியத்தில் தன் படைப்புக்கள் வழியாகவும் அங்கீகாரம் பெற்றவர் ஜெயகாந்தன். கடலூர் மஞ்சக் குப்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தவர். வடசென்னை என்று அறியப்படும் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிகள் வாழும் பிராட்வே, தங்கசாலை, லோன்ஸ்கெயர் எல்லாம் அவருக்குப் பழக்கமான இடங்களாக இருந்தன. பால்ய காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் கம்யூனில் இருந்தார். அவருக்கு கம்யூன் வாழ்க்கை, சமூகம் பற்றிய பார்வையைக் கொடுத்திருந்தது. கதைகள் எழுத ஆரம்பித்தப் போது, தான் அறிந்த சென்னை நடைபாதை வாசிகள், லோன்ஸ்கெயர் பகுதி மக்களின் வாழ்க்கையை அவர்கள் பேச்சை முதன்மையாகக் கொண்டெழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்த கதைகள் இல்லை என்பது மட்டுமல்ல அவற்றுக்கு எதிரான கதைகள். ஆனால் உயிர்த் துடிப்புக் கொண்ட அசலான கதைகள் வாழ்க்கை என்பதற்கு…

Read More

குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா. ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 1: அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள்

ச.சுப்பாராவ் ஆதிக்க​தைக​ளை இப்படி நடந்திருக்கு​மோ, இப்படி நடந்திருக்கலா​மோ, இது ம​றைக்கப்பட்டு விட்ட​தோ என்று ஒவ்​வொரு ப​டைப்பாளியும் ​​யோசித்து, ​யோசித்து ​வேறு​வேறு வடிவங்களில் எழுதிப்பார்ப்ப​தை மறுவாசிப்பு என்கி​றோம். மறுகூறல் என்பதுதான் சரியான ​சொல் என்றாலும்கூட மறு வாசிப்பு என்ற ​பெயர் நி​லைத்துப் ​போனதால் நாமும் அ​தை​யே பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகமிக அதிகமான அளவிற்கு மறுவாசிப்பிற்கு உள்ளான  ஆதிக்க​தைகள்  ராமாயணமும், மகாபாரதமும் என்று தனியாகச் ​சொல்ல ​வேண்டியதில்​லை. இ​வை எழுதப்பட்ட காலத்தி​லே​யே மறுவாசிப்பிற்கு உள்ளான​வை. காரணம், சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இல்லாமல் பல்லாண்டு காலங்கள் வாய்வழியாக​வே இ​வை பரவிய​போது, ​சொல்பவர் சரக்குகளும் இயல்பாக ​சேர்க்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 10-12 நூற்றாண்டுகளுக்குப் பின் நாட்டில் பக்தி இயக்கம் ​வேகம் ​பெற்று, இக்க​தை மாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றப்பட்டு, பல ​மொழிகளிலும் இ​வை ​மொழியாக்கம் ​செய்யப்பட்ட​போது, நடந்ததும் மறுவாசிப்புதான்.  எனினும், அச்சுப் புத்தகம் பரவலாகி,…

Read More
நூல் அறிமுகம் 

சித்தார்த்தன்: வாழ்வும் தேடலும்

சா. கந்தசாமி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் காண பெற்றோர்களைத் துறந்து கோவிந்தன் என்னும் தோழனோடு சேர்ந்து கொண்டு போகிறான். நெடும்பயணத்தில் தோழனைத் துறந்து சமணனாகி அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகி அலைகிறான். அவன் நன்குக் கற்றவன். தன்னையும், உலகத்தையும் அறியும் ஞானம் பெற்று இருக்கிறான¢. அவன் ஞானமே அவனை அலைய விடுகிறது. அலைந்து திரியும் அவன் கௌதம சித்தார்த்தர் ஞானமுற்று, காவியுடையணிந்து தானமேற்று உபதேசம் புரிந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் படுகிறான். அவரைக் காணவும் அவரின் அருளுரையைக் கேட்கவும் அவாவுற்று தோழன் கோவிந்தனுடன் செல்கிறான். சாவதி நகரத்தில் சித்தார்த்தன் முதலில் புத்தரைப் பார்த்தான். கடவுளே வந்து வழிகாட்டியதுபோல இருந்தது. பொன்நிற உடை அணிந்து, துறவுக் கோலத்தில் அகந்தை என்பதை அழித்துவிட்டு நிதானமாகத் தான கலயத்தோடு நடந்து செல்லும்…

Read More

நமஸ்தே திலீப்குமார்!

கீரனூர் ஜாகிர்ராஜா இவ்வளவு காலமாக திலீப்குமாரை எழுத முடியாமல் போய்விட்டதற்காக இந்த சந்தர்ப்பத்தில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 90களில் எழுத வந்த எல்லோரையும்போல நானும் அவருடைய ‘கடிதம்Õ கதையைத் தான் முதன் முதலாக வாசித்தேன். தொடக்கத்தில் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டபோது இந்தி நடிகர் திலீப்குமார்தான் என் நினைவில் வந்து நீங்கினார். கூடவே சாய்ரா பானுவும். “எவ்வளவுக்கு சினிமா மோகமென அறிந்து கொள்வீராக..” அப்போது ‘சாய்ரா பானுவை உங்களுக்குத் தெரியாது’ என்று ஒரு சிறுகதை கூட எழுத முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். இந்த சாய்ராபானு பால்யத்தில் என்னை அலைக்கழித்த 17 பெண்களில் ஒருத்தி. என் உறவின் முறையும்கூட. முதலில் குறிப்பிட்ட சாய்ராபானு திலீப்குமாரின் காதல் மனைவி, நடிகை, அவர்கள் நட்சத்திரத் தம்பதிகள். நடிகர் திலீப்குமாருக்கு இப்போது வயது 91. சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திக்கு ‘‘இல்லை. யூசுப் சாஹெப்…

Read More

தூரத்துப் புனைவுலகம் 13: மறக்க வேண்டிய ஞாபகங்கள்

ம. மணிமாறன் நம்முடைய மனதிற்குள் ஆழமாக உருவாகி இறுதிப்படும் சகலவிதமான முன்தீர்மானங் களுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிட முடியாது. மனங்கள் தகவமைக்கப்படுகின்றன. வெகு இயல்பாக நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். நம்முடைய தேர்வுகளுக்கும், ரசனைக்கும் கூட இப்படியான பழக்கங்களே பின்புலமாக இருந்து வருகின்றன. வாசிப்பதற்கான புத்தகங்களைத் தெரிந்தெடுப்பதிலும் கூட இப்படியான மனநிலைகள் இருக்கத்தான் செய்கிறது. முதல் பார்வையில் தவறவிட்டமைக்காக பின்னாட்களில் வருந்தும்படியான சூழல் எல்லோர் வாழ்விலும் ந¤கழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவறிப்போன காதல், தவறிப்போன நட்பு, தவறிப்போன புத்தகங்களையும்கூட மறுமுறை எதிர்கொள்ளும்போது மனம் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. மகிழ்ச்சியோடு குற்ற உணர்ச்சியும் இயைந்தே சூழ்ந்திருக்கும் நிமிடங்களாகி விடுகின்றன அப்போதைய நேரம் முழுவதும். முதல் பார்வையில் தவறவிட்ட பொக்கிஷங்களின் குறியீடு ‘‘அனார்யா.’’ வாங்கிப் பலநாட்கள் ஆன பிறகும் வாசிக்காமல் வைத் திருக்கும் புத்தகங் களைப் புரட்டு உடனே என எனக்குள் கட்டளை…

Read More
நூல் அறிமுகம் 

கால்களின் கீழே சுழலும் உலகம்

விநாயகமுருகன் தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும்   இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த  நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை.  அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம். தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம். மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப்…

Read More
மற்றவை 

கிளியர் அண்ட் பிரசண்ட் டேஞ்சர்:

டாம் கிளான்சி தன்னையறியாமல் எழுதிவிட்ட  நாவல் ச.சுப்பாராவ் ஏகாதிபத்தியத்தின் ​கைகள் ரத்தப் பிசுபிசுப்​போடுதான் அதிகாரம் ​செலுத்துகின்றன. அந்த ரத்தம் அது நசுக்கும் குட்டி நாடுகளின் ஜனநாயக சக்திகளின் ரத்தம் மட்டும்தானா?  இல்ல​வேயில்​லை.  அதில் அதன் ​சொந்த நாட்டினரின் ரத்தம் – குறிப்பாக, தனது நாட்டிற்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று, அதிகாரவர்க்கத்தின் ஆ​ணைகளுக்கு இணங்க எங்​கெங்கோ ​தொ​லைதூர நாடுகளில்​ ​​சென்று உயிர்விடும் எளிய ​தேசபக்த ராணுவ வீரர்களின் ரத்தம் அதிகமாகவே இருக்கும்.  அதுவும், அப்படிப்பட்ட வீரர்கள் ​பெரும்பாலும் அ​மெரிக்காவின் விளிம்பு நிலை மனிதர்களான கறுப்பர்கள், வந்​​தேறிகளான ஹிஸ்பானிக் என்ற​ழைக்கப்படும் ஸ்பானியர்களாக இருப்பது மற்​றொரு ​கொடு​மை.  வியட்நாமிலும், ஆப்கனிலும், ஈராக்கிலும் இதுதான் நடந்தது. இப்​போதும் நடக்கிறது. இனியும் நடக்கும்.  இப்படிப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் ​வெற்றி​பெறும்​போது தலைவர்கள் ​தொ​லைக்காட்சிகளில் வீரவசனம் ​பேசுவதும், சிக்கலாகும்​போது அது ஏ​தோ ஒருசில அதிகாரிகளின் தவறு…

Read More
தூரத்து புனையுலகம் 

இளம்பிராயத்து நினைவுகளும் மனப்பிறழ்வின் விசித்திரங்களும்

ம.மணிமாறன் உடைந்த வளையல்கள், வடிவமழிந்த  ஓடுகள், கிழிந்து எதிர்ப்படும் துணிகள், இவை யாவும் யாதொன்றையோ ஞாபகமூட்டும் குறியீடுகள். நீரற்ற கிணறுகளை உற்றுப்பார்க்கிற யாவரின் மனத்திரைக்குள்ளும் கிணற்றுச் சுவர்களில் இருந்து டைவ் அடித்து நீரை நிலைகுலையச்  செய்த தன்னுடைய சேக்காளிகளின் முகம் வரத்துவங்கிவிடுகிறது. எப்போதும் வ¤ழித்துக்கொள்ளக் காத்திருக்கின்றன நினைவுகள். சாணி மெழுகிய தரையினில் உருள்கிற பகடைக் காய்களுக்குள் நூற்றாண்டு கால கதைகள் உறைந்து கிடக்கின்றன. பகடைகளில் பதிந்திருக்கும் ரேகைகளுக்குள் தான் அந்த ஊரின் ரகசியங்கள் சேகரமாகியிருக்கிறது. இவற்றை அறிந்திட மேலைத்தேய தர்க்கங்களால் இயலாது. தத்துவம், கோட்பாடு, உளச்சிக்கல் என தர்க்கித்துக் கிடந்தன மேற்கத்திய கதை மொழிகள். கீழைத் தேய தொன்மங்களால் அவற்றைக் கலைத்து ஊடாடி புதிய மொழிதலைக் கண்டடைந்தவர் முரகாமி. முரகாமியின் வாசகர்கள் உலகெங்கும் விரிந்து கிடக்கிறார்கள். வெளிவந்த முதல் நாளிலேயே மில்லியன் கணக்கில் விற்கிற அவருடைய படைப்புகளின்…

Read More
தூரத்து புனையுலகம் 

அழிய மறுக்கும் அடையாளங்கள்

ம. மணிமாறன் நான் யாராக இருக்கிறேன் என்பதும், யாராக இருக்க வேண்டும் என்பதையும் நான் முடிவுசெய்வதில்லை. எங்கிருந்தோ எடுக்கப்படுகிற முடிவினை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறவனாக நான் உருவாக்கப்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தோற்றங்கள் மாறுகிறது. அழுக்கு உடை தொலைந்து போகிறது. உடலும்கூட நெகிழ்வாகவும், நாசூக்காகவும் மாறிவிடுகிறது, இருந்தபோதும் நான் எப்போதும் நானாக மட்டும்தான் இருக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் நான் யார் என்பது ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே என்பதைத் துயரமும், எள்ளலும் கலந்த மொழியில் முன் வைத்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. தன்னுடைய தன்வரலாற்று நாவலான ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ நூலினை அவர் 1990களில் எழுதியிருக்கிறார். 90-ம் ஆண்டு என்பது தலித் அரசியல், தலித் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்த தர்க்கங்களும், விவாதங்களும் தீவிரமாக எழுந்த காலம். அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரின்…

Read More