You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல்திறக்கும் நாடக நிலம் – 14: வாழ்வே சங்கீதமும் மாயபொம்மையும்…

ச. முருகபூபதி என் குழந்தைப்பருவத்தின் நேசத்தால் நனைந்த வார்த்தைகளை நான் தேடிப்பார்த்தபோது காகிதத்தால் செய்யப்பட்ட நீலநிற இன்லாண்ட் கடிதங்களை திறந்தபடியே நினைவுக்குகைகளில் உலவும் பலரும் கரம் நீட்டி அன்பின் ஈரத்தை என்மீது பூசியபடி இருக்கின்றார்கள். ஆறாம் வகுப்பு முதல் வருடம் படித்து பெயிலாகி இரண்டாம் வருடம் திரும்பப்படித்து பாஸான போது தொடர் மழை நாளில் நான் பிரியமாக வளர்த்த சேவல்கள் இரண்டும் கருங்கோழிகள் ஐந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனது. பால்யத்தில் என் அதீத காதலர்களாக அவைகளே இருந்தன. அன்று எங்கள் வீட்டைச்சுற்றி தாவனிமாடுகள் பல வாரங்கள் கிடைபோடப்பட்டு மாட்டு வியாபாரிகள் துண்டு போர்த்தி கைகுலுக்கி விலைபேசித் திரிவதைக் கண்ட நாங்கள் அவர்களைப்போலவே நடந்தலைவோம். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் பலமுறை சேவல்கள் உட்காரும். சுப்பையா என்ற மாட்டு வியாபாரியுடன் வீட்டோடு நல்ல உறவு ஏற்பட்டு அவர்களோடு இரவெல்லாம் வைக்கோலுக்குள் சுருண்டு…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

கோமாளிகளும் சங்கீதத்தின் குழந்தைகளே…

ச. முருகபூபதி “எம் நெடிய பாதைகளில் முள் மலர்கள் காத்து நிற்கின்றன. பகைமையின் நஞ்சினைத் தந்தார்கள். கோழைத்தனத்தினை நாவில் தடவி உயிர்ப்பிக்கும் நடிப்புக் கலையைச் செய்கின்றோம். துன்பப்படுதலெனும் நித்ய சடங்கில்தான் எங்களின் கருணை விதைகள் துளிர்க்கின்றன. உடலால் எழுதுகிறோம். முகத்தால் எழுதுகிறோம். வசைச் சொற்களை வாங்கிக் கொள்கிறோம். அசிங்கங்களைச் சுமந்து அடிவாங்கி அலைகிறோம். கலைகளின் அடிமைகள் நாங்கள்.. நாங்களே உலக உயிர்களின் அன்னை” மேலே சொல்லப்பட்ட வரிகள் எங்கள் மணல் மகுடி நாடகக் குழுவின் மிருக விதூஷகம் நாடகத்தில் உள்ள கோமாளிகளின் வாக்குகள். அந்நாடகம் சமகால அரசியல் நெருக்கடிகளையும், மனித ஜீவராசிகளின் துயரங்களையும் கோமாளிகளின் பார்வையில் நின்று பேசும் நாடகம். மேலும் கோமாளி தன் நிலைப்பாடாக மிருகவிதூஷக நிலையை நாடக நிலத்தில் உடலால் பேசத்துவங்கிய நாடகமாகும். ஐந்து வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட அந்நாடகத்தின் எல்லைதாண்டி இப்போது திரும்பவும்…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 4

 கதைபோடும்  சித்திரக்காரக் குழந்தைகள் ச. முருகபூபதி       சித்திரங்கள்: கே. பிரபாகரன் (வயது 4) உருவமற்ற அரூபக்கோடுகளால் சித்திரமிட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிகலைஞர்களெனும் குழந்தைகளே. வாடகை வீட்டின் மதில்களிலோ சொந்தவீட்டின் மதில்களிலோ தெருக்கள் தோறும் எவருமற்று சிதிலமடைந்த வீடுகளின் காரை உதிர்ந்த மதில்களிலோ பேசிக் கொண்டிருப்பவை குழந்தைகளால் உருவாக்கப்பட்ட சித்திரக் கோடுகளே. அவை கதைகளும் இசைமைகொண்ட மழலை மொழியும் குழைத்துக் கீறப்பட்ட கோடுகள். பெரியவர்கள் தம்மிடம் உரையாடி விளையாடிட விலகிய தருணங்களில் தன்னெழுச்சியாய் வந்த கதை சொல்லும் கலை சுமந்த கோடுகள். ஒவ்வொரு நாளும் பல்லுயிர்களைச் சுமந்த அக்கோடுகளுக்கு குழந்தைகள் தினம் தினம் புதுப்புதுக் கதைகளும் அர்த்தங்களும் தனியே பாடிக்கொண்டிருப்பார்கள். எல்லாக் குழந்தைகளும் சித்திரமிடும்போது கதையின் மந்திரங்களை  முனகிக் கொண்டிருப்பதாலேயே இப்பிரபஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். புது வீடு கட்டிய அரசு அலுவலர் அவர்….

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள்

ச. முருகபூபதி மரஉடம்புகளின் தளிர் விரல்கள் கொண்டு சிறகென எழுதிக்கொண்டிருப்பார்கள். வறண்ட கண்மாய்களில் பிஞ்சுப்பாதங்கள் குதித்தோடி தவளைகளை மீன்குஞ்சுகளை நண்டுகளை தம்வெற்றுக் கரங்களால் சித்திரமிட்டுக்கொண்டிருப்பார்கள். சாணி மொழுகிய வீட்டு முற்றத்தில் தரைகீறிய வகுப்பறைகளில் வெயில் மழைகளில் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் காரை உதிர்ந்த மதில்களின் களத்துமேட்டு நிலத்தின் விழிப்புற்ற பொழுதிலிருந்து சொப்பன நிலம் நுழையும் வரை கதைபோட்டு பாடியபடி சதா தம் புல்வரிக்கோடுகளால் வரைந்துகொண்டிருப்பது இப்பிரபஞ்ச வெளிகளில் கலையின் தான்யங்களை விதைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளே. பெரியவர்களாகிய நாம் உணர்ந்திராத காற்றின் ஏடுகள் மறைந்திருக்கும் வெற்றுவெளியில் திசாதிசைதொட்டு ஓடியோடி நின்று பெரியவர்களிடம் தாம் பெற்ற மனக்காயங்களை கண்களில் வழிந்த உப்பு மைத்தொட்டு குழந்தைகள் முடிவற்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி இண்டர்நெட்டை தம் வழிகாட்டியாகக் கொண்ட இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்குள் குழந்தைமையின் கனவுகள் புரியாது விளம்பரக் கல்வியின் மோகத்துள் சிக்கி…

Read More

அந்தர நிலத்தின் தேவதைகள்

ஹோமரின் ஓடிசியில் சர்சி என்ற பாத்திரத்தின் குணாம்சத்தைக் கொண்டு சர்சி, சர்க்கஸ் என உருவாயிற்று. சர்சி எனும் தேவதையைக் காண மன்னர்களும் தளபதிகளும் அவள் கோட்டைக்குள் நுழைய தன் மீது ஆசை கொண்டவர்களுக்கு அமிர்தம் கொடுத்து அது உடலுக்குள் போனபிறகு விலங்காகி விடுகிறார்கள். இப்படி விலங்காகியவர்கள் சூழ்ந்த தனிராஜ்யத்தின் ராணியாகத் திகழ்பவளே இந்த சர்சி. பல்லுருக் கொள்ளும் கலையின் விதியினை அறிந்த சர்சி எனும் தேவதையிடமிருந்து ஜனனமானது சர்க்கஸ்.

Read More

உடல் திறக்கும் நாடக நிலம்-1 இசைக்குள் இறங்கிய மூதாதையர்கள்

இன்று கூட்டுழைப்பு கூட்டுச்செயல்பாடுகள், கூட்டுச்சிந்தனை, அரிதாகிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் அலைவுறுகின்றோம். இவையனைத்தையும் தனக்குள் சுமந்து கொண்டிருக்கும் அதிகலை நிலை நாடகத்துள் சூழ் கொண்டிருப்பதோடு, மனித சிந்தனைகளின் புதிய வடிவங்களையும் உடல்நிலம் ஆன்மா இணைந்து வேட்கையோடு திறக்கும் வல்லமையின் சிறகுகளை மனிதர்களுக்கு முடிவற்றுத்தருவது அனைத்துக் கலைவடிவங்களையும் உள்ளடக்கிய நாடகமே. பல்லுயிர் சார்ந்த நம் நிலத்தின் பண்பாட்டு பூர்வமான பாடுகளைப் பேசுகிற தருணம் நாடகக் கலை மீது நிலங்கொள்வதாகவே நம்புகிறேன்.

Read More