பரிணாமவியலும் சார்பியலும் பிரபஞ்சத்தைக் காண உதவும் இரு கண்கள்

காரல் சாகன் காரல் சாகன் அண்டத்தின் ஏனைய இண்டுஇடுக்குகளில் வசிக்கும் வெளிக்கிரக உயிரிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியவர். நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அமினோ அமிலங்களை தோற்றுவிக்கும் இயல்புடையது என்பதை நிரூபித்ததன் மூலம் புவியில் உயிரிகளின் தோற்றத்திற்கு கூறப்பட்ட, கூறப்படும் Ôபுனித’ காரணிகளை உடைத்தவர். வெள்ளி கிரகத்தின் மேற்தரை வெப்பநிலையை துல்லியமாக நிறுவிய இவரது மற்றொரு கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவை நட்சத்திரங்களிலிருந்து கோள்களின் தொலைவு ஏற்படுத்தும் விளைவுகளுக்குப் பொருத்தி மற்றொரு சர்ச்சையை முடித்துவைத்தது. அயல்கிரகவாசிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு விளங்கும் ஆரம்ப சமிக்ஞை தகட்டை(Pioneer plaque) தயாரித்தவர் சாகன். அது வியேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்டது. அறிவியலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் 600 அறிவியல் ஆய்வுரைகள், 20 அறிவியல் நூல்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் வழியே பதிவுசெய்து வாழ்நாள் முழுவதும் அறிவியல் விழிப்புணர்வுப் போராளியாய் விளங்கிய காரல் எட்வர்ட்…

Read More