விரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30

கமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் இரா.முருகவேள்  / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்!’  மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்? மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி? காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா? வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது? கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…

Read More