You are here
நூல் அறிமுகம் 

ஒளி ஆண்டு கொண்டாட்டம்

முனைவர். இரா.சாவித்திரி    வான் பொருள்களான சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகிவற்றின் மீது உள்ள எண்ணற்ற புதிர்களை உடைத்தெறிந்து உண்மை உணர்த்தியவர்கள் அறிவியல் அறிஞர்கள். அந்த அறிவியல் உண்மைகளை சாதாரண மனிதர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்ட நூல் நிறமாலை எனச் சொல்லலாம். சர்வதேச ஒளியாண்டாகக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில் (2015) ஒளியைப் பகுத்து ஆராய்ந்து பிரபஞ்ச ரகசியங்களை அறியும் நியமாலை ஆய்வு குறித்த எளிய அறிமுக நூல். வெகு தொலைவில் உள்ள வான்பொருள்களிலிருந்து நம்மை வந்தடையும் ஒளியை மட்டும் வைத்து அந்த வான்பொருள் குறித்து அறிய வழி செய்கிறது. நிறமாலை பகுப்பு ஆய்வு நிறமாலை என்பது என்ன? நிறமாலை பகுப்பு ஆய்வின் வழி எப்படி வான்பொருட்களின் தன்மை குறித்து அறிந்து கொள்கிறோம், நிறமாலை பகுப்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைக் கதைபோல சுவையாகச் சொல்லிச்…

Read More
நேர்காணல் 

பண்டைய இந்தியாவில் விமானம் இருந்தது போன்ற போலியான தகவல்கள் அறிவியலை வளர்க்க உதவாது

– த.வி. வெங்கடேஸ்வரன்  சந்திப்பு: இரா. நடராசன் எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். ஒரு ரயில்வே தொழிலாளியாகத் தன் வாழ்வைத் துவங்கிய த.வி.வெ. தன்சொந்த முயற்சியால் அறிவியலில் முதுகலைப்பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல பொருள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார்.பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணி ஆற்றி வருகிறார். தமிழகஅரசு சமச்சீர் பாடப்புத்தகம்…

Read More

21ம் நூற்றாண்டில் மூலதனம்…

ஆப்பிள் நிறுவனத்தில் டிம் கூக் என்பாருக்கு 2011இல் மட்டும், சம்பளம், பங்கு என்ற பல வகையில் தரப்பட்ட ஈடு 38.70 கோடி அமெரிக்க டாலர் ஆகும்! இது ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி சம்பளத்தைப் போல சுமார் 6250 மடங்கு ஆகும்! வால்மார்ட் நிறுவனத்தில் சராசரி ஊழியர் ஆண்டுக்கு 25000 டாலர் ஊதியம் பெறுகிறார். ஆனால் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் டியுக் 2011இல் பெற்ற ஊதியம் 230 லட்சம் டாலர். இந்தப் போக்கு விதிவிலக்கு அல்ல. பில்கேட்ஸ், வர்ரேன் பப்பெட், கார்லோஸ் சிம் போன்ற எண்பத்தைந்து பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து, வறுமையின் பிடியில் இருக்கும் 350 கோடி, அதாவது உலகின் சரிபாதி மக்கள் தொகையின் சொத்துகளுக்கு சமம்.

Read More