மையத்தில் ஒரு முக்கோணம்

ராமானுஜம் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் காட்சி. அழுத்தி நிதானமாக மாவைக் கைகள் பிசைகின்றன. மாவு உருண்டையை அழுத்திப் பிசையும்போது காமிரா அருகே நெருங்க ‘க்ளோஸ் அப்’பில் காட்டுகிறது. அது ஒரு மனிதமூளையாகவும் பரோட்டா மாவாகவும் மாறி மாறித் தெரிகிறது. நம் மனம் அதற்குப் பழகும் போது, கைகள் மாவை நீண்ட குழாய் போல உருட்டிப் பிசைகின்றன. அடுத்த கணம் கத்தி வைத்து அதைச் சிறிய உருளைகளாக வெட்டும்போது, நம் மனம் பெரும் அதிர்ச்சி அடைகிறது. மூளையைப் பிசைந்து வெட்டினால் மனம் தாங்குமா? இது ஒரு படக் காட்சி. ஐஐடி மும்பையில் பணிபுரியும் நண்பர் பேராசிரியர் ராஜா மோஹந்தி 25 வருடங்கள் முன் எடுத்த குறும்படம். “எச்சரிகையாயிரு குழந்தாய், அவர்கள் உன் மனத்தைத் திருடுகிறார்கள்!” என்று பள்ளிக் கல்வி குறித்து எடுத்த…

Read More