வசந்தி என்றொரு பெண்ணின் வாழ்க்கைச் சரிதம்

பி. சுகந்தி தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்களின் மானவி என்ற நாவல் ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தலைப்பில் கௌரி கிருபானந்தன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாவலைப் படிக்க விரித்தால் படித்து முடிக்காமல் மூட மனமில்லை. வாசிப்பை வேகமாக்கும் எழுத்து நடையும் கதை அம்சமும் நிறைந்துள்ள நாவல். முதல் பாதியைப் படித்துமுடிக்கும் போது சின்னத்திரையில் பார்க்கும் மெகா சீரியல் போல கதையில் அடுத்தடுத்த பகுதியைத் தெரிந்து கொள்ள மனம் ஆவல் கொள்கிறது. கதையின் கதாநாயகி வசந்திக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்தவள் லாவண்யா, தன் தாயைப் போலவே கணவன், வீடு, மாமியார், குடும்பம் என உலகையே வீட்டிற்குள் சுருக்கிக் கொண்டவள், இளையவள் சவிதா வைசாக்கில் இஞ்சினியரிங் படிப்புடன் மாணவர் சங்கத் தலைவியும் கூட. சவிதா தன்னம்பிக்கையான பெண் ஆதலால், பட்டப்படிப்பை முடித்து விட்டு, கிணற்றுத் தவளையாய்…

Read More