You are here
நூல் அறிமுகம் 

தேவ.பேரின்பனின் தமிழர் வளர்த்த தத்துவங்கள் பரந்த வெளியில் நின்று பேச வேண்டிய பிரதி

நா. விச்வநாதன் இந்திய மரபென்பது வைதிக மரபாகத்தான் தொடக்க காலத்திலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்து அதுவே நிலை பெற்றுவிட்டது. தத்துவம் என்றாலே ஆன்மிகம் பக்தி என்ற கருத்தே முன்னிலைப்படுத்தப் பட்டது. பல்வேறு சமூகங்கள் இணைந்த ஒரு நிலப்பரப்புக்கான பொது அடையாளங்கள் இந்த மரபிலிருந்தே பெறப்பட்டது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க வேண்டும். தமிழர் தத்துவம் என்ற அழுத்தமான சொல்லாடல் இல்லாமல் ஆனது. அரசர்களும் அவர்களுக்கு அடுத்த படிநிலையிலிருந்த அல்லது அவர்களுக்கு இணையாக இருந்தவர்களும் உபதேசித்ததே ஞானம் என்றானது. அறம் என்று சொல்லப் பட்டது. அடித்தட்டு மக்களுக்கோ உழைப்புதவிர வேறெதுவும் தேவையில்லை என்ற கருத்து உருவானது. வறியவர்களுக்கு அறம் எப்போதுமே கூற்றாகவே இருந்திருக்கிறது. தண்டனைக் குரியவர்கள் என எளிய மக்கள் அடையாளப்படுத்தப் பட்டனர். இது ஒருவிதத்தில் எளிய மக்களை சமூகத்திலிருந்து விலக்கம் செய்வதே. இவற்றைக் கவனத்தில்…

Read More
நிகழ்வு 

தேவ.பேரின்பன்: முதலாம் ஆண்டு நினைவு தின நூல் வெளியீட்டு விழா

மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து இல்லத்தில் 2014 செப். 18ல் நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் தலைமைவகித்தார்.தோழர் தேவ.பேரின்பன் நினைவுமலரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் பெற்றுகொண்டார். மறைந்த தோழர் தேவ. பேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் எனும் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூலை மார்க்சிஸ்ட் மாதஇதழ் ஆசிரியர் என். குணசேகரன் வெளியிட முதல் பிரதியை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ச. வரதராசுலு பெற்றுகொண்டார். நினைவு உரையை கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் டி. இரவீந்திரன், மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, தமுஎகச….

Read More
கட்டுரை 

தேவ பேரின்பன்: வீண் பெருமை பேசாத அறிவியல்பூர்வ ஆய்வாளர்

செப்டம்பர் 17, 2014 தேவ.பேரின்பனின் முதலாம்  ஆண்டு நினைவு நாள். காலம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது நினைவுகள் நமது மனக் கண் முன் இன்னமும் பசுமையாகவே தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றன. அதற்குள் ஓராண்டு முடிந்துவிட்டது. தத்துவம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் என அவர் பேசாத பாடுபொருளே இல்லை எனலாம். எல்லாவற்றையும் மார்க்சியக் கண்ணோட்டத்திலேயே அணுகுவார். பொதுவுடமை இயக்கத்தில் 40 ஆண்டுக்காலம் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய அவர் ஏராளமான கட்டுரைகளையும் பலதுறை சார்ந்த ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் தமிழாராய்ச்சித்துறையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். செம்மொழி உயராய்வு மையத்தின் மூலம் தமிழர் தத்துவம் குறித்த ஆய்வ¤னை மேற்கொண்டார். தொன்மைக் காலத்தில் தமிழர்களிடையே நிலவி வந்த அறிவியல் தத்துவங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். எட்டாண்டு காலம் ‘சமூக விஞ்ஞானம்‘…

Read More