தூரத்துப் புனைவுலகம் – 17 உருகி ஓடும் சொற்களின் பாதை

ம. மணிமாறன்   நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல் போகிறபோது மரபினில் ஐக்கியமாவதும், அதன் பெருமைகளை ஊதிப் பெருக்கிப் பேசுவதும் தவிர்க்க முடியாத செயலாகிப் போகிறது பலருக்கும். மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கற்க முயல்பவர்களே புதிய எல்லைகளை அடைகிறார்கள். இது எல்லாத் துறைகளையும் போலவே இலக்கியத்திற்கும் கூட பொருந்தும். அதிலும் குறிப்பாக புனைகதைகளுக்கு மிகவும் பொருந்தும். நூற்றைம்பது வருட புதின இலக்கியவரலாற்றில் புதிய, புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வடிவத்தைக் கலைத்து அடுக்குவது, வடிவமேயில்லாத புதிய வடிவத்தை உருவாக்குவது எனப் புதிய எழுதுதல் முறைகள் இன்றுவரையிலும் புதிது புதிதாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வடிவத்தில் மட்டுமில்லாது கருத்தியல் ரீதியாக பொருளடக்கத்திலும் கூட புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. இப்போது யாரும் தனிநபர் ஒருவரின்…

Read More