கடந்து சென்ற காற்று – 1: கால்களும் கைகளும்

ச. தமிழ்ச்செல்வன் 1  நான் 1978இல் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து பால்வண்ணம் போன்ற கோவில்பட்டி மார்க்சிஸ்ட் தோழர்களால் ஈர்க்க்கப்பட்டிருந்த ஆரம்ப வருடங்களில் ஒரு நாள். தோழர் ஜவகர் வீட்டில் வைத்து நடந்த ஒரு கூட்டத்தின் முடிவில், (அப்போதெல்லாம் கோவில்பட்டி ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த தோழர் ஜவகர் வீட்டில்தான் ..என்ன அழகான ஒரு வீடு அது.. எங்களை மடியில் படுக்க வைத்து அன்பு கலந்த மார்க்சியப்பால் ஊட்டுவார்கள்) ஜவகர் என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிச்சுப்பாரு என்று  சொன்னார். அது விவசாய இயக்கத்தின் வீர வரலாறு என்கிற புத்தகம். எழுதியவர் கோ.வீரய்யன் என்று இருந்தது.அன்றுதான் அப்புத்தகத்தின் வழியேதான் தோழர் வீரய்யன் அவர்கள் எனக்கு முதன்முதலாக அறிமுகம். இளவேனில் வரைந்த அட்டைப்படத்தோடு வந்த அப்புத்தகத்தை தோழர் வைகறைவாணன் பெருமுயற்சி எடுத்து  கார்க்கி நூலகம் என்கிற…

Read More