நமஸ்தே திலீப்குமார்!

கீரனூர் ஜாகிர்ராஜா இவ்வளவு காலமாக திலீப்குமாரை எழுத முடியாமல் போய்விட்டதற்காக இந்த சந்தர்ப்பத்தில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 90களில் எழுத வந்த எல்லோரையும்போல நானும் அவருடைய ‘கடிதம்Õ கதையைத் தான் முதன் முதலாக வாசித்தேன். தொடக்கத்தில் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டபோது இந்தி நடிகர் திலீப்குமார்தான் என் நினைவில் வந்து நீங்கினார். கூடவே சாய்ரா பானுவும். “எவ்வளவுக்கு சினிமா மோகமென அறிந்து கொள்வீராக..” அப்போது ‘சாய்ரா பானுவை உங்களுக்குத் தெரியாது’ என்று ஒரு சிறுகதை கூட எழுத முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். இந்த சாய்ராபானு பால்யத்தில் என்னை அலைக்கழித்த 17 பெண்களில் ஒருத்தி. என் உறவின் முறையும்கூட. முதலில் குறிப்பிட்ட சாய்ராபானு திலீப்குமாரின் காதல் மனைவி, நடிகை, அவர்கள் நட்சத்திரத் தம்பதிகள். நடிகர் திலீப்குமாருக்கு இப்போது வயது 91. சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திக்கு ‘‘இல்லை. யூசுப் சாஹெப்…

Read More