மீண்டெழும் மறுவாசிப்புகள் – 7: மாய மாளிகை

ச.சுப்பாராவ் எண்ணற்ற கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கு முடிந்ததும் விலகிச் சென்றுவிடும். ஒவ்வொரு பாத்திரமும் பிறகு என்ன ஆனது என்று விளக்கம் தருவதும் கதாசிரியனுக்கு இயலாத காரியம். ஆனால் வாசகனுக்கு அப்படி விட்டுவிடுவது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால்தான் அக்காலத் திரைப்படங்களில் வணக்கம் போடுவதற்கு முன் காமெடியனும், அவனது ஜோடியும் கையில் மாலையோடு ஓடிவந்து எங்களயும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்பார்கள். அப்படிப்பட்ட காட்சி வைக்காவிட்டால், எத்தனை அற்புதமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், ரசிகன் வெளியே வரும்போது, கடசீல வடிவேலு/ விவேக் / சூரி  என்ன ஆனான்னே காட்டல்ல பாரு என்று புலம்பிக் கொண்டு வருவான். வாசகனின் இந்த எதிர்பார்ப்புதான்  மறுவாசிப்பு எழுத்தாளர்களுக்கு புதிய புதிய கருக்களைத் தருகிறது. ஏதேனும் ஒரு சிறுபாத்திரம் என்ன ஆனது என்ற தனது தேடலில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுகிறார்கள்….

Read More