You are here

நூலகங்களை மீட்போம்: படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான்… அய்யோ என்று போவான்…

தலையங்கம் பெருமழை நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் பல. மக்களுக்காக மக்களே என்பன போன்ற பேருண்மைகளை நமக்கு பேரிடர்மட்டுமே விவரிக்கமுடியும். சேகுவாரா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ‘ஆபத்தின்போது நண்பனை அறியலாம். பேராபத்தின்போது அரசை அறியலாம்’ மழை மேலும் சில மணி நேரங்கள் நீடித்திருந்தால் நம் மாநில தலைநகரம் முற்றிலும் அழிந்திருக்கும். வழக்கம் போல நீலிக்கண்ணீர் வடிக்கவும்… நிவாரணத்தை தர போஸ்கொடுப்பதும்… ஸ்டிக்கர் அரசியல், வெறுப்புத் தொலைக்காட்சிகள்… புதையுண்ட நகர்கள் முற்றிலும் அழிந்த குப்பங்கள்… இவற்றைத் தாண்டி இன்று மீட்கப்பட வேண்டியது மொத்தம் 1117 சிறு மற்றும் பெரு நூலகங்கள் ஆகும். அதிலும் 27 பொது நூலகங்கள் முற்றிலும் சிதைந்ததில் சுமார் 6 லட்சம் புத்தங்கங்களில் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட மிக முக்கிய ஆய்வு நூல்களும் அடக்கம். சென்னை, திருவள்ளூர், மற்றும் கடலுர் மாவட்டங்களில் தரைத்தள நூலங்கங்களில் பகுதியளவு நூல்கள்…

Read More

மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…

ஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது – நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை) மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே…

Read More

தலையங்கம்: ஆதலினால் திரண்டெழுவோம்!

விடியல் நெருங்கும் களங்களின் மீது அணிவகுத்துச் செல்ல எப்போதும் கட்டளைக்கு காத்திருக்கிறேன்… நாளுக்கு நாள் என் உறுதிப்பாடு வளர்கிறது.   – சே குவரா. விவசாயிகளின் தற்கொலைப் பட்டியலில் நம் தமிழகத்திற்கு மூன்றாமிடம்… பொது (தற்கொலை) எண்ணிக்கையில் இரண்டாமிடம்… விவசாயிகள் மற்றும் பெண்கள்… 76 சதவிகிதம். பத்து பன்னிரண்டு வகுப்புகள் கல்லூரி மாணவர்கள் தற்கொலையில் 16 சதவிகிதம் தலைவர்களின் ஊழல் சிறை வைப்பில் (தலா இரண்டு லட்சம் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றா?) எட்டு சதவிகிதம் என அந்தப் பட்டியல் விரிவாகப் பேசுகிறது. சமூகம் சேர்ந்து செய்யும் கொலை தான் தற்கொலை என்பது நிதர்சன உண்மை என்றாலும் சென்ற ஒரே வருடத்தில் தமிழகத்தில் 16, 927 தற்கொலைகள் நிகழ்ந்திருப்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகம் யூனியன் பிரதேச பட்டியலில் புதுச்சேரிக்கே முதலிடம். நம் தமிழ் மண்ணில் மரணங்கள் சரியாக கணக்கெடுக்கப் படுவடுதால்…

Read More

துதிபாடிகளும்…குடியாடிகளும்

உலகில் அநீதி இழைக்கப்படும்போதெல்லாம் உன்னால் மிகுந்த கோபத்தில் நடுங்க முடியுமென்றால், நாம் சகாக்கள்… சினேகிதர்கள்         – சேகுவாரா     துதிபாடிகளும் குடியாடிகளும் தமிழகத்தை அருவருப்புக் கொள்ளத்தக்க மண்ணாக மாற்றிவரும் இன்றைய சூழல் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது. முன்னாளும் இன்னாளும் கொட்டும் கோடிகளைப் பெற்று துதிபாடிகள் தூய்மைச் சான்றிதழ் வழங்கும் ஒரு சூழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தோழர் என்.வரதராஜனுக்கு சொந்தமாக ஒரு வீடு கிடையாது என்பது சமீபத்திய உதாரணம். நேர்மை, எளிமை, தூய்மை தொடரவேண்டும். ‘குழந்தைகளுக்கு தேசப்பற்று போய்விட்டது. மனிதர்கள் நீதிபோதனையோடு வளரவேண்டும்’ என சமீபத்தில் சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் பள்ளியில் அதை எப்படிச் செய்யலாம் என ஒரு கூட்டம் போட்டு தூயமனம், நாட்டுப்பற்று, பொதுவாழ்வில் நேர்மை என்றெல்லாம்சேர்த்து அந்த திட்டத்திற்கும் விரைவில் தமிழக அரசே ஒரு பெயர் சூட்டும் என்ற…

Read More

தலையங்கம் : படிக்கத் தெரிந்திருந்தும்…

‘படிக்கத் தெரிந்திருந்தும் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், படிக்கவே தெரியாதவர்களிடமிருந்து எவ்வகையிலும் வேறுபடவில்லை’ என்பது மார்க் ட்வெயின் சொன்ன நெத்தியடி வாக்கியம். காரல் மார்க்ஸ் சின்ன வேலைகளுக்கும் கால்நடையாகவே செல்வாராம். அவ்விதமான நடைப்பயணங்களில் புத்தகம் அவரது கூடவே செல்லும். வாசித்தபடி நடப்பது. அல்லது நடக்கும்போது வாசிப்பது.. இவ்வகையானவர்களை ஆங்கிலத்தில் பிப்லியோ பெடஸ்ட்ரியன் (Bibelio Pedesterion) என அழைக்கிறார்கள். வாசிப்புபற்றி மார்க் ட்வெய்ன் சொன்னதைப் போலவே, நாம் நடப்பது பற்றியும் கூறலாம். நம்மில் பலர் நடக்கவே முடியாதவர்களிடமிருந்து பெரிதாய் வேறுபடவில்லை. இன்று பக்கத்து வீட்டுக்குக் கூட இரு சக்கர மோட்டார் வாகனத்தில் தான் போவேன் என்பவர்களே அதிகம் என்றாலும், கணிசமாக ஒரு கூட்டம் காலைமாலை நடைபயிற்சிக்குப் போகவே செய்கிறது. நீரிழிவு முதல் உடல்பருமன் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு அஞ்சி நடப்பவர்கள் காதுகளில் சங்கீதம். வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், சமீபத்தில் நடைவாசிப்பாளர்கள் ஜெர்மனியில்…

Read More

ரத்தம் தோய்ந்த புத்தகங்கள்…

வழக்கம்போல அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. ஆறு தாலிபான் தீவிரவாதிகள் அந்தப் பள்ளிக்குள் காலை 10:30 மணிக்கு நுழைகிறார்கள். கையில் பல வகையான ஆயுதங்களுடனும் வெடிபொருட்களோடும் வந்த அவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அந்த நாட்டு ராணுவ உடைjiயில் இருந்தார்கள். பெஷாவர் நகரின் பிரபல மைய அரசுப் பள்ளியான அதில் அப்போது ஐநூறு மாணவர்கள் இருந்தார்கள். முழுப்பள்ளியே அமைதியாக இருந்தது. காரணம் தேர்வுகள். அதைத்தவிர பள்ளியின் கூட்டரங்கில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அடுத்து என்ன என்ன படிக்கலாம் என்பது குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கமும் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று தோட்டாக்கள் சுடும் சப்தம். தேர்வு அறைகள், நூலகம், கூட்ட அரங்கம் எல்லா இடங்களிலிருந்தும் குழந்தைகள் அலறும் சப்தம் கேட்கிறது. நாற்காலியோடு கட்டிவைத்து தங்கள் வகுப்பு ஆசிரியைகள் உயிரோடு கொளுத்தப்படுவதைப் பார்த்துத் துடித்த குழந்தைகள் மீது தோட்டாக்கள்…

Read More

புத்தகங்களை முத்தமிடுவோம்

ரத்த ஆறுகள் ஓடிக் கொண்டிருந்தபோது, எங்கள் பசித்த வயிறு பரிதவித்தபோது உங்கள் விழிகள் ஓவியங்களையே கொண்டாடின உங்கள் செவிகளில் இசையே போற்றப்பட்டது. – அய்குங் (சீன மக்கள் கட்சி) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் பொது இடத்தில் ஒரு தம்பதியர் முத்தமிடுவது ஒரு உரிமையாக முன்மொழியப்பட வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். இது நமது பாரம்பரிய புனிதத்தைக் கெடுத்து இந்துத்துவா நாட்டின் ‘பெருமை’களைக் குலைத்துவிடும் என்று தங்கள் புனித ஆயுதங்களுடன் புறப்பட்டது ஒரு கூட்டம். முத்தமிடுவோம் என்றவர்களுக்கு முத்தமிட்டால் சுட்டு விடுவோம் என்று காவி மொழியில் மிரட்டுவது மட்டும் ஆபாசமில்லையா என்று கேட்பதில் நியாயமிருக்கிறது. காதலர்தினம், முத்த தினம் அது இது என்று புதிதாக உலக வர்த்தகவாதிகள் தங்களது வக்கிரத்தை விற்றுக் காசாக்கும் நூதனக் கொள்ளையும் நமது எப்எம் முதல் தொலைக்காட்சி சானல்கள் தினசரி இதழ்கள்…

Read More

உலகப் புத்தகக் காட்சிகளிடம் கற்போம்

கலகக்காரக் கவிஞன் கலீல் ஜிப்ரான், புத்தகங்களை ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ என்றே அழைப்பார். ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு காட்சி. உலகெங்கும் இன்று குறிப்பிடத்தக்க வகையில் ஆயிரம் புத்தகக்கண்காட்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இ.பப்ளிஷிங் எனும் மின்வெளியீடு ஆதிக்கம் செலுத்தியும் அச்சாக்க புத்தகங்களின் மீதான ஈர்ப்பு சிறிதும் குறையவில்லை. கடந்துவரும் இந்த ஐந்தாண்டு காலத்தை மிக அதிக நூல்கள் வெளிவந்த ஆண்டுகளாக யுனெஸ்கோ அறிவிக்கிறது. ஜெர்மனியில் நடக்கும் பிராஸ்ஃபர்ட் சர்வதேச  புத்தகக் கண்காட்சி ஜெர்மன் மொழி நூல்களுக்கு என்றே பிரதான இடம் அளித்தாலும் பிறமொழி நூல்களும் கடந்த ஆறு ஆண்டுகளாக இடம்பெற உதவுகிறது. உரிமம் பெற்று மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ளவும் பிற நாட்டு வெளியீட்டாளர்கள் பயன்பெறவும் வசதியாக தனித்தனியே குழந்தைகள் இலக்கியம், அறிவியல், அறவியல், சமூக இலக்கியம், நவீனத்துவம் எனப் பிரித்து பதினேழு தனித்தனி நூல் சுருக்கங்களுடன் யுனெஸ்கோ முன்மொழியும்…

Read More

என்ன செய்ய வேண்டும்?

‘நீண்ட காலத்துக்குப் போராட வேண்டி இருக்கிறது. உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறையப் படி’ -சேகுவாரா ( தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் ) அரசுப் பள்ளிகளை மூடுவிழா நடத்தும் அழிவிலிருந்து மீட்க ஒரு பிரமாண்ட இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கையெழுத்து இயக்கமாக வாசிப்பு இயக்கமாக 25 மாவட்டங்களில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. முற்றிலும் வணிக மயமாக்கப்பட்டுவிட்ட வியாபார கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதே குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தை முன்மொழிந்து போராடிப் பெற்ற நமது இறுதி இலக்கு. அருகாமைப் பள்ளி பொதுப்பள்ளி இவையே நாம் முன்வைக்கும் மாற்றுக் கல்வியாகும். அதை அரசுதான் திறம்பட நடத்தமுடியும். பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி சிங்கப்பூர் ஹவாய் தீவுகள், கனடா ஆகிய அதி முதலாளித்துவ நாடுகள் உட்பட 62 நாடுகளில் சாத்தியமாகி இருக்கிறது. இங்கிலாந்தில் இன்றும்…

Read More
தலையங்கம் 

ஆசிரியர் தினத்தின் ஆணிவேர்… வாசிப்பு!

எழுத்தறிவிப்பது என்பதை நமது முன்னோர்கள் ஒரு  வேலைக்கான படிநிலையாகக் கருதவில்லை. அதை ஒரு வாழ்க்கையாகக் கருதினார்கள். அதை வகுப்புகள், பாடங்கள், வருட அடிப்படைப் படிநிலைகள் எனப் பிரித்தது ஒரு வசதிக்காகத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதில் பொதுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதும் முடிந்துவிடும் இயந்திர சுழற்சியாக  இன்று கல்வி பார்க்கப்படுவதில் நியாயம், தர்க்கம் ஏதுமில்லை. கல்வி, வாழ்க்கை முழுவதும் நடைபெறுவது ஆகும். வெகுஜன மக்களின் பெருந்திரள் இந்தியாவில் கல்வியறிவு பெறாமல் இருப்பதே வறுமைக்கும் பிணிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் காரணம் என்பது அமர்தியா சென் உட்பட்ட உலக அறிஞர்களின் கருத்து. எனவே சமூகத்தின் உயர்நிலை நோக்கி புதிய சிந்தனை மரபுகளைத் தோற்றுவித்தவர்களுக்கும் ஆசான்கள் என்றே பெயர் வந்தது. ஆசிரியர் பணி அப்படிப்பட்டது. சமீபத்தில் காலமான தோழமையின் சின்னமான நீலமேகம் போன்ற…

Read More