தேவ.பேரின்பன்: முதலாம் ஆண்டு நினைவு தின நூல் வெளியீட்டு விழா

மார்க்சிய அறிஞர் தேவ. பேரின்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து இல்லத்தில் 2014 செப். 18ல் நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் தலைமைவகித்தார்.தோழர் தேவ.பேரின்பன் நினைவுமலரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் பெற்றுகொண்டார். மறைந்த தோழர் தேவ. பேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் எனும் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூலை மார்க்சிஸ்ட் மாதஇதழ் ஆசிரியர் என். குணசேகரன் வெளியிட முதல் பிரதியை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ச. வரதராசுலு பெற்றுகொண்டார். நினைவு உரையை கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் டி. இரவீந்திரன், மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.இளம்பரிதி, தமுஎகச….

Read More