You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-10: பரசுராமன் என்னும் நிலைக்கண்ணாடி

ச.தமிழ்ச்செல்வன் மரணம் தவிர்க்க முடியாததுதான். இயற்கையான நிகழ்வுதான். ஆனாலும் அது எதிர்பாராத தருணத்தில் நம் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு நேரும்போது நாம் முற்றிலும் நிலைகுலைந்துதான் போகிறோம். புதுச்சேரியிலிருந்து தோழர் ராமச்சந்திரன் தொலைபேசியில் சொன்னபோது நம்ம பரசுராமனா இறந்துட்டார்? என்று கேட்டேன். பலரும் இப்படித்தான் கேட்டார்கள். என்னால் இன்னும் அவருடைய மரணத்தை ஏற்க முடியவில்லை. பாண்டிச்சேரி மொழியியல் மையத்தில் பேராசிரியராகப்பணியாற்றி வந்த முனைவர் பரசுராமன், நம் சம காலத்தில் ஒரு பேராசியர் அணிந்து கொண்டிருக்கும் எந்த மூடாக்கும் இல்லாத நம் சக தோழராக நம்மோடு பணியாற்றியவர். ஒரு உண்மையான காந்தியவாதி. இடதுசாரிகளோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் புதுவை அறிவியல் இயக்கத்தோடும் தன்னைக் கரைத்துக்கொண்டு பணியாற்றியவர். அவருடைய மரணத்துக்கு முந்தின இரவு வரை  இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஒரு நாள் முன்னதாக சென்னையில் தமுஎகச அமைப்புக்கூட்டம் ஒன்றில்தான் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்….

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-9 : உரைகளுக்கு நடுவிலிருந்து….

ச.தமிழ்ச்செல்வன் கடந்த மாதக் கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் பாராட்டுக்கூட்டங்களாக அமைந்தன. இரண்டு கூட்டங்களிலும் தலா மூன்று படைப்பாளிகள் பாராட்டப்பட்டனர். இரண்டுமே இரண்டு தமுஎகச கிளைகள் நடத்திய கூட்டங்கள். ஒன்று திருப்பூர் வடக்குக் கிளை நடத்திய கூட்டம்.அதில் மின்சார வேர்கள் உள்ளிட்ட பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய 80 வயது தாண்டிய தோழர் தி.குழந்தைவேலுவும், பாரதி புத்தகாலயத்தின் மொழிபெயர்ப்பாளர் தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமியும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் தோழர் ஆர்.ரவிக்குமாரும் பாராட்டப்பட்டனர். தோழர் குழந்தைவேலு நீண்ட காலம் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியவர்.அந்த வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதத் துவங்கியவர். நைனா கி.ராஜநாராயணனைப் போல வயதான பிறகு இளம் எழுத்தாளராகப் பயணம் துவக்கியவர். பெரிய அங்கீகாரமோ பாராட்டோ, பரவலான பேச்சோ இல்லாவிட்டாலும் (தமுஎகச விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கியப்பெருமன்ற விருது போன்றவை கிடைத்தாலும்) என்…

Read More

கடந்து சென்ற காற்று – 8: வகுப்புவாதக் காற்று

ச.தமிழ்ச்செல்வன் சென்னை ஐஐடி பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததைக் கண்டித்து சரிநிகர் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒருவர் எல்லோருக்கும் ஒரு நூலை இலவசமாக-விலையில்லாமல்-விநியோகித்துக்கொண்டிருந்தார்.எனக்கும் ஒன்று கொடுத்தார்.கொடுத்தவர் ரயில்வே தொழிற்சங்கத்தலைவர் தோழர் இளங்கோ.கொடுத்த  புத்தகம் பிபன் சந்திராவின் வகுப்புவாதம்- ஓர் அறிமுக நூல். தமிழாக்கம் மு.அப்பணசாமி.முந்நூறு பிரதிகள் வாங்கி வைத்துக்கொண்டு இப்படிப் பலருக்கும் அளித்து வருகிறார் இளங்கோ. நல்ல கரசேவை. கடந்த பத்தாண்டுகளில் நான் அதிகத்தடவைகள் மீண்டும் மீண்டும்  வாசித்த புத்தகம் பிபன் ச்ந்திராவின் COMMUNALISM IN MODERN INDIA . புத்தகம் கிழிகிற நிலைக்கு வந்து விட்டது.நம் மனதோடு எளிய மொழியில் பேசுபவர் பிபன் சந்திரா.பெரிய ஆங்கில வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரடியான மொழியில் இருக்கும். COMMUNALISM-A PRIMER  என்கிற நூலே இப்போது அப்பணசாமி மொழிபெயர்த்திருப்பது. இது…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று -7: 3 மாதங்கள் 4 மாநாடுகள் முழுமையான அனுபவங்கள்…

ச. தமிழ்ச்செல்வன் மூன்று மாதங்களில் நான்கு பெரிய மாநாடுகளில் பங்கேற்றது ஒருபக்கம் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் (இப்படி மாநாடு மாநாடுன்னே போய்க்கிட்டிருந்தா நீ எப்போ போய் மக்களைச் சந்திக்கப்போறே என்று கொப்பளித்த மனச்சாட்சியின் நக்கல் பக்கத்தை  அமைதிப்படுத்திவிட்டு) யோசித்துப்பார்த்தால் நான்கு பெரிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்ற வெளிச்சத்தை இம்மாநாடுகள் அளித்ததை உணர முடிகிறது. 1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு – சென்னை 2.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு – திருப்பூர் 3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு – விசாகப்பட்டினம் 4.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு – விருதுநகர் கட்சியின் தமிழ்மாநில மாநாட்டின் அறிக்கையும் விவாதங்களும் மனசில் ஓடிய எண்ண ஓட்டங்களும் தமிழகத்தின் வரலாற்றினூடாக மார்க்சிஸ்ட்டுகள் நடந்து வந்த பாதையை வரலாற்றில் வைத்துப் பார்க்க…

Read More

கருத்து சுதந்திர உரிமைப் போர் தொடரட்டும

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்தி வரும் எழுச்சிமிகு உரிமைப் போர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 2010ல் எழுதப்பட்ட ஒரு படைப்பு மாதொரு பாகன். குழந்தைப் பேறில்லா தம்பதியர் கோவில் தேர் இழுத்தால் பிரார்த்தனை நிறைவேறும்  எனும் நம்பிக்கைக்குப் பின்னால் நடக்கும் உலகறிந்த உயர்சாதி வக்கிரத்தைத் தோலுரித்த படைப்பு. ஆனால் 2014ல் எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது மாவட்டமான நாமக்கல் (திருச்செங்கோடு) தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் பணமுதலைகள் அடிக்கும் பகல் கொள்ளையைக் கடுமையாக விமர்சித்து எழுதியதும், பிரச்சனையை எதிர்கொள்ளவும் பதில் தரவும் திராணியற்ற பணம் படைத்தோர் கூட்டம் அவரது படைப்புகளுக்கு சாதி வர்ணம் பூசி இந்துத்வா வெறியாட்டத்தைத் தொடங்கி  அதை அரசின் அதிகார அமைப்புகள் ஆதரவோடு தனது ‘சிவ தாண்டவத்தை’ காவி தர்பாரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த உண்மைகளை…

Read More