பழமையின் புதிய கவி அவதாரம்

மு. முருகேஷ்   தமிழ் மரபின் செறிவோடும் புதுமையின் அழகோடும் தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதையின் சமூகத் தாக்கமும் புதுக்கவிதையின் அர்த்தமிக்க எளிமையையும் கைவரப் பெற்றவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோர்வுறாமல் எழுதிக் கொண்டிருப்பதும், புதுப்புதுக் கவிதை வடிவங்களை அறிமுகம் செய்து வருவதும் சற்றே சவாலான ஒன்றுதான். எண்பதாவது வயதில் கால் பதித்திருக்கிற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்த சவால்களை தனது உறுதியான இலக்கியக் கொள்கையாலும் எழுத்தின் சமூகத் தேவை குறித்த சரியான பார்வையாலும் வென்றெடுத்து நிற்பவர். ‘உலராது பெருகும் உலகின் விழிநீர்த் துடைக்க ஒரு விரல் தேவை’ என்கிற வரிகளில் ஒலிக்கிற மானுட விடுதலையை விரும்பும் கவிக்குரலும், ‘சுதந்திரத்தை என்னால் சாப்பிட முடியவில்லை சோறு கொடு…’ என்பதிலான மனிதநேயக் குரலும், இன்றைக்கும் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் விடாது…

Read More