திரைப்பெண்களின் பிம்பங்கள்

அ. வெண்ணிலா தமிழர்களை வெகுவாகக் கவர்ந்த கலை வடிவம் திரைப்படம். மற்ற கலை வடிவங்கள் எல்லாமே அதில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாலேயே அறியப்படுகிறது. ஓவியம் குறித்தோ, சிற்பக்கலை குறித்தோ, இசை,நாட்டியம்,இலக்கியம் குறித்தோ வெகுசன மக்கள் கூடும் எல்லா அரங்கங்களிலும் பேசிவிட முடியாது. அதற்கான கவனத்தைக் கோருவதே பெரும் கடினமான முயற்சியாகவோ, தோல்வியடையும் முயற்சியாகவோ இருக்கும். திரைப்படம் குறித்தே இடம்,பொருள், ஏவல் இல்லாமல் பேச முடியும். இன்றைக்குப் பிரபலம் என்றால், திரைப்படத்துறை சார்ந்தவர்களைக் குறிப்பதாக மாறிவிட்டது. 25 ஆண்டுகள் அரசியலில், அதிகாரத்தில் அறியப்படும் ஒருவரைவிட ஓர் ஆண்டுக்குள் திரைத்துறையில் நுழைந்தவர்களை நம் மக்கள் எளிதாக நினைவு கூர்கிறார்கள். காரணம் காணும் திசையெங்கும் அவர்களுடைய பிம்பம் நம் கண்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல. அசையும் பிம்பங்களால் உயிரூட்டப்பட்ட  காட்சிகள் மனித மனதை வசீகரிக்கத் துவங்கிய காலத்தின் வசீகரத்தில் இருந்து…

Read More