குட்டிச்சுவர் கலைஞன் ஒருவனல்ல 13 பேர்…

க.வை.பழனிசாமி ஒரு படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித்தூவி புதுப்புது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. பயிர்களைக் கண்டு பரவசம்கொள்ளும் மனம் மேலுமான விளைச்சல்களை நோக்கி நகர்கிறது. அனுபவம்… அனுபவம் கிளர்த்தும் எண்ணம்…. எண்ணம் கூட்டிச்சென்று காட்டும் கண்படாத இடங்கள். இந்த இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. இப்படியான அரிதான எழுத்தில் தொடர்ந்து பயணிக்கும் படைப்பாளி கீரனூர் ஜாகிர்ராஜா. ஜாகிர்ராஜா தனது எழுத்தை ‘ஜின்னாவின் டைரி’ நாவலில் கொண்டாடி மகிழ்ந்திருப்பார். பகடியும் விமர்சனமும் கலந்த கொண்டாட்டமாக வாசகனைக் கவர்ந்த நாவல் அது. இப்போது “குட்டிச்சுவர் கலைஞன்” அதேவேகத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்களிலும் புனைவின் பேரழகை நாட்டிய அழகில் அதிரவிடுகிறார். எப்படி இப்படியொரு பாய்ச்சல்? கோள்களில் கால் பதிக்கும் பெரு நகர்தல் என்று வியக்கிறோம். தெருவில் குழந்தைகள் குதித்து கும்மாளமிட்டு…

Read More