கிளியர் அண்ட் பிரசண்ட் டேஞ்சர்:

டாம் கிளான்சி தன்னையறியாமல் எழுதிவிட்ட  நாவல் ச.சுப்பாராவ் ஏகாதிபத்தியத்தின் ​கைகள் ரத்தப் பிசுபிசுப்​போடுதான் அதிகாரம் ​செலுத்துகின்றன. அந்த ரத்தம் அது நசுக்கும் குட்டி நாடுகளின் ஜனநாயக சக்திகளின் ரத்தம் மட்டும்தானா?  இல்ல​வேயில்​லை.  அதில் அதன் ​சொந்த நாட்டினரின் ரத்தம் – குறிப்பாக, தனது நாட்டிற்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று, அதிகாரவர்க்கத்தின் ஆ​ணைகளுக்கு இணங்க எங்​கெங்கோ ​தொ​லைதூர நாடுகளில்​ ​​சென்று உயிர்விடும் எளிய ​தேசபக்த ராணுவ வீரர்களின் ரத்தம் அதிகமாகவே இருக்கும்.  அதுவும், அப்படிப்பட்ட வீரர்கள் ​பெரும்பாலும் அ​மெரிக்காவின் விளிம்பு நிலை மனிதர்களான கறுப்பர்கள், வந்​​தேறிகளான ஹிஸ்பானிக் என்ற​ழைக்கப்படும் ஸ்பானியர்களாக இருப்பது மற்​றொரு ​கொடு​மை.  வியட்நாமிலும், ஆப்கனிலும், ஈராக்கிலும் இதுதான் நடந்தது. இப்​போதும் நடக்கிறது. இனியும் நடக்கும்.  இப்படிப்பட்ட ராணுவ நடவடிக்​கைகள் ​வெற்றி​பெறும்​போது தலைவர்கள் ​தொ​லைக்காட்சிகளில் வீரவசனம் ​பேசுவதும், சிக்கலாகும்​போது அது ஏ​தோ ஒருசில அதிகாரிகளின் தவறு…

Read More