You are here
நூல் அறிமுகம் 

தொய்வில்லாது உழைத்த தோழர்களின் சரிதம்

இரா. ஜவஹர் ‘களப் பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் சாதனை என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக உங்களுக்குத் தோன்றக் கூடும். நிச்சயமாக மிகையில்லை. தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆனால் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை விவரித்துத் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா ? அதை அந்தத் தொண்டர்கள் படித்து நெஞ்சம் நெகிழ்வதையும், இளைய தலைமுறையினர் படித்து எழுச்சி அடைவதையும் நீங்கள் கண்டதுண்டா?  அந்த வகையில் இதுவே முதல் புத்தகம். நான் அறிந்த வரையில். தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்று விவரங்களைத் தேடித் தேடிச் சேகரித்தும், சேகரிக்கச்செய்து பெற்றும் இதை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ஏராளமான தொண்டர்களைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும்…

Read More

கீழத்தஞ்சையில் சமூகநீதிக்கான போராட்ட வரலாறு!

தொழிலாளி வர்க்கத் தலைவராகப் பரவலாக அறியப்பட்ட போதிலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் குரல் எழுப்பி தன் வாழ்நாளையும் அடுத்த பல தலைமுறையினரின் வாழ்நாளையும் பயனுள்ளதாக மாற்றிய சமூகப் போராளியும் தலைசிறந்த கம்யூனிஸ்டுமான தோழர் வி.பி.சி.யின் 27வது நினைவுதினமான மே 8, 2014 மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதொரு நாளாகவும் அமைந்தது.

Read More

அரை நூற்றாண்டு கால போராட்ட வரலாறு!

பொதுவுடமை இயக்கம் என்றாலே சம்பளம் பற்றிப் பேசுவார்கள், சாதி பற்றிப் பேச மாட்டார்கள்; வர்க்கங்களைப் பார்ப்பார்கள், வாழ்க்கை நிலையைப் பிறப்பு மூலம் நிர்ணயிக்கும் சமூக அநீதி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்று போகிற போக்கில் சொல்லிப் போகிற நிலை மாற இந்தப் புத்தகம் வழி செய்யலாம்.

Read More
நூல் அறிமுகம் 

கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும், தலித் மக்கள் உரிமைகளும்

ஜி. ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபிலச் செயற்குழு சார்பாக கீழத்தஞ்சைப் பகுதியின் பொறுப்பாளராக இருந்த ஒரு பத்தாண்டு காலத்தில் கட்சிப் பதிக்காக கிராமங்களுக்குச் செல்கிற போதும், மூத்த தோழர்களோடு பேசுகிற போதும், கடந்த கால இயக்கம் பற்றி தோழர்கள் கூறிய கருத்துக்கள், விபரங்கள் ஒருபுறம் பிரமிப்பாகவும் மறுபுறம் பெருமையாகவும் இருந்தது. கீழத்தஞ்சையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் கையில் பிலங்கள் குவிந்திருந்தன.  அதன் காரணமாகவே தலித் மக்கள் மீது குரூரமான தீண்டாமைக் கொடுமையிம் இருந்தது. பண்ணையடிமைகளாக இருந்த பெரும்பான்மையான தலித் மக்களும் சாதி இந்து விவசாயிகளும் குத்தகை விவசாயிகளும் பண்ணையார்களின் கடுமையான சுரண்டலுக்கும், கொடுமைக்கும் ஆளானார்கள். கீழத்தஞ்சை தலித் மக்கள் தமிழகத்தில் வேறு எந்தப்பகுதியிலும் கண்டிராத தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்தனர்.  கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும், பண்ணையார்களின் ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் விவசாயிகளும், பண்ணையடிமைகளான…

Read More