மீண்டெழும் மறுவாசிப்புகள்-4 ஜயா ஒரு மறுகூறல்

ச. சுப்பாராவ் சொல்லப்பட்ட க​தை​யை இது இவ்விதமாக நடந்திருக்காது, இப்படியாக​வே நடந்திருக்கும் என்று பகுத்தறிவிற்கு இ​சைவாய் ​​யோசித்துப் ப​டைப்பது மறுவாசிப்பு என்று ​சொன்​னோம். சமீபகாலமாய் பழைய புராணங்களில் ​சொல்லப்படாத விஷயங்க​ளே இல்​லை என்று இன்​றைய நவீன விஞ்ஞானக் கருத்துக்களை ஏற்றிக் கூறுவதும் ஒரு வலதுசாரி மறுவாசிப்புப் ​போக்காக இருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவில் இப்​போது ஒரு புதுவிதமான மறுவாசிப்பு மு​றை ஒன்றும் உருவாகியுள்ளது. மூலப் புராணக்க​தை​யை உள்ளது உள்ளபடி அப்படி​யே கூறிச் ​செல்வது. பின்குறிப்புகளில் அந்த சம்பவங்கள் பற்றிய விமர்சனங்க​ளைச் ​சொல்லி, அது பற்றி வாசக​னை ​யோசிக்க ​வைப்பது என்ற இந்தப் புதிய மு​றை​யை, ​மேற்கண்ட இருவ​​கை மறுவாசிப்புகளிலிருந்தும் ​வேறுபடுத்திக் காட்ட மறுகூறல் க​தை என்று குறிப்பிடலாம் என்று கருதுகி​றேன்.    இப்படியான மறுகூறல் சம்பிரதாயத்​தை ஆரம்பித்து ​வைத்துள்ளவர் ​தேவதத் பட்நாயக். இவரது ஜயா என்ற நூல்…

Read More