You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-10: பரசுராமன் என்னும் நிலைக்கண்ணாடி

ச.தமிழ்ச்செல்வன் மரணம் தவிர்க்க முடியாததுதான். இயற்கையான நிகழ்வுதான். ஆனாலும் அது எதிர்பாராத தருணத்தில் நம் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு நேரும்போது நாம் முற்றிலும் நிலைகுலைந்துதான் போகிறோம். புதுச்சேரியிலிருந்து தோழர் ராமச்சந்திரன் தொலைபேசியில் சொன்னபோது நம்ம பரசுராமனா இறந்துட்டார்? என்று கேட்டேன். பலரும் இப்படித்தான் கேட்டார்கள். என்னால் இன்னும் அவருடைய மரணத்தை ஏற்க முடியவில்லை. பாண்டிச்சேரி மொழியியல் மையத்தில் பேராசிரியராகப்பணியாற்றி வந்த முனைவர் பரசுராமன், நம் சம காலத்தில் ஒரு பேராசியர் அணிந்து கொண்டிருக்கும் எந்த மூடாக்கும் இல்லாத நம் சக தோழராக நம்மோடு பணியாற்றியவர். ஒரு உண்மையான காந்தியவாதி. இடதுசாரிகளோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் புதுவை அறிவியல் இயக்கத்தோடும் தன்னைக் கரைத்துக்கொண்டு பணியாற்றியவர். அவருடைய மரணத்துக்கு முந்தின இரவு வரை  இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஒரு நாள் முன்னதாக சென்னையில் தமுஎகச அமைப்புக்கூட்டம் ஒன்றில்தான் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்….

Read More
கட்டுரை 

கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஈர்க்கும் எழுத்துக்கள்…

தொகுப்பு எம்.கண்ணன் எளிய மனிதர்கள். கிராமத்து மனிதர்கள், பாவப்பட்ட ஜனங்களின் அன்றாட வாழ்வின் துயரத்தையும், வலியின் ரணமும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்முன் வந்து செல்கிறது. சிறுவர், சிறுமியர், தொழிலாளர்கள், பெண்கள் என சமூகத்தின் மனித முகங்கள் எப்படி சுருங்கி, விரிகிறது என சொல்லாடல்கள் உரக்கப் பேசுகிறது. குதிங்காலிட்டு உட்கார்ந்து பார்த்தாள், சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தாள். ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டியும், இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தாள். ம்கூம் எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது. குதிங்காலிட்டு வயிற்றில் முழங்கால்கள் அழுத்த உட்கார்வதில்தான் கொஞ்சம் பசியும் வலியும் தெரியாமலிருந்தது. ஒட்ட வேண்டிய தீப்பெட்டிப் பெட்டிகள் இன்னும் ரெண்டேதான் இருந்தன…. இப்படியாக தீப்பெட்டி ஒட்டும் பெண்ணின் கந்தக நெடி கலந்த வாழ்க்கை பாவனை என்ற கதையின் கீழ் பற்றி எரியும் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது. அதேபோல் ஆண், பெண்…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-9 : உரைகளுக்கு நடுவிலிருந்து….

ச.தமிழ்ச்செல்வன் கடந்த மாதக் கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் பாராட்டுக்கூட்டங்களாக அமைந்தன. இரண்டு கூட்டங்களிலும் தலா மூன்று படைப்பாளிகள் பாராட்டப்பட்டனர். இரண்டுமே இரண்டு தமுஎகச கிளைகள் நடத்திய கூட்டங்கள். ஒன்று திருப்பூர் வடக்குக் கிளை நடத்திய கூட்டம்.அதில் மின்சார வேர்கள் உள்ளிட்ட பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய 80 வயது தாண்டிய தோழர் தி.குழந்தைவேலுவும், பாரதி புத்தகாலயத்தின் மொழிபெயர்ப்பாளர் தோழர் மிலிட்டரி பொன்னுச்சாமியும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் தோழர் ஆர்.ரவிக்குமாரும் பாராட்டப்பட்டனர். தோழர் குழந்தைவேலு நீண்ட காலம் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றியவர்.அந்த வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதத் துவங்கியவர். நைனா கி.ராஜநாராயணனைப் போல வயதான பிறகு இளம் எழுத்தாளராகப் பயணம் துவக்கியவர். பெரிய அங்கீகாரமோ பாராட்டோ, பரவலான பேச்சோ இல்லாவிட்டாலும் (தமுஎகச விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கலை இலக்கியப்பெருமன்ற விருது போன்றவை கிடைத்தாலும்) என்…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 5 வாசிப்பில் முக்கியமானதும் முக்கியமற்றதும்

ச.தமிழ்ச்செல்வன்    கடந்த இரு மாதங்களும் பரபரப்பான நாட்களால் நிரம்பியிருந்தன. புத்தகங்களால் வந்த பரபரப்புத்தான் அதிகம்.. ஒரு இரவு நேரத்தில்  கரூரிலும் ஒரு எழுத்தாளர் தூக்கிச் செல்லப்பட்டு அடிக்கப்பட்டார்.அவர் பெயர் புலியூர் முருகேசன் என்கிற செய்தி கிடைத்தது. கிடைத்த அரைகுறைச் செய்தியோடு கரூர் மாவட்டத்தோழர்களைத் தொடர்பு கொண்டு புலியூர் முருகேசனைக் கண்டுபிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தூக்கிக் கொண்டுபோய் பல இடங்களில் வைத்து அடித்தது உண்மை. காவல்துறையே வேறு எங்கோ வைத்திருப்பதுபோல் தெரிகிறது என்று தோழர்கள் தகவல் சொன்னார்கள். தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கொடுத்த தகவலின் அடிப்படையில் புலியூர் முருகேசனின் மைத்துனரைத் தொடர்பு கொண்டேன். நள்ளிரவுவாக்கில் முருகேசனிடமே பேச முடிந்தது. போலீசுடன் போராடி அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்ட கதையை அவர் சொன்னார். மனதில் ஏற்பட்ட பதட்டம் முடிவுக்கு வந்தது. அவர் எழுதிய ‘பாலச்சந்திரன்…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 1: கால்களும் கைகளும்

ச. தமிழ்ச்செல்வன் 1  நான் 1978இல் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து பால்வண்ணம் போன்ற கோவில்பட்டி மார்க்சிஸ்ட் தோழர்களால் ஈர்க்க்கப்பட்டிருந்த ஆரம்ப வருடங்களில் ஒரு நாள். தோழர் ஜவகர் வீட்டில் வைத்து நடந்த ஒரு கூட்டத்தின் முடிவில், (அப்போதெல்லாம் கோவில்பட்டி ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த தோழர் ஜவகர் வீட்டில்தான் ..என்ன அழகான ஒரு வீடு அது.. எங்களை மடியில் படுக்க வைத்து அன்பு கலந்த மார்க்சியப்பால் ஊட்டுவார்கள்) ஜவகர் என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிச்சுப்பாரு என்று  சொன்னார். அது விவசாய இயக்கத்தின் வீர வரலாறு என்கிற புத்தகம். எழுதியவர் கோ.வீரய்யன் என்று இருந்தது.அன்றுதான் அப்புத்தகத்தின் வழியேதான் தோழர் வீரய்யன் அவர்கள் எனக்கு முதன்முதலாக அறிமுகம். இளவேனில் வரைந்த அட்டைப்படத்தோடு வந்த அப்புத்தகத்தை தோழர் வைகறைவாணன் பெருமுயற்சி எடுத்து  கார்க்கி நூலகம் என்கிற…

Read More

ஜனநாயகம் காக்க

ச.தமிழ்செல்வன் இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று ரீதியான சிறப்பு, அதன் பலம் பலகீனம், இருக்கின்ற ஜனநாயக அமைப்புகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம், இருப்பதை மேம்படுத்த வேண்டிய அவசியம், இந்தியா போன்ற ஒரு பண்முக நாட்டின் ஒற்றுமையில் ஜனநாயகம் வகிக்கும் பங்கு  ஆகியவற்றை விளக்கும் ச.தமிழ்ச்செல்வன், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், ஊடகம் ஆகிய அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் முடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள், அவற்றின் நோக்கம், அதனை முறியடிக்க நாம் செய்ய வேண்டியவை அனைத்தையும் தன் வழக்கமான சரள மொழியில் விளக்குகின்றார். ஃபாசிச மேகம் சூழ்ந்துவரும் காலத்தில் அது வெற்றியடைய அநுமதித்தால் இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களும் அடித்தட்டு மக்களும் இழக்கப்போவது என்ன என்பதி விளக்கும் காலப் பொருத்தம் மிகுந்த சிறுநூல். ஜனநாயகம் பாதிக்கப்பட்டால் முதலில் பெரு நட்டம் அடையப்போவது அடித்தட்டு உழைப்பாளி மக்கள்தாம் என்பதை அனைவரும்…

Read More