You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று -7: 3 மாதங்கள் 4 மாநாடுகள் முழுமையான அனுபவங்கள்…

ச. தமிழ்ச்செல்வன் மூன்று மாதங்களில் நான்கு பெரிய மாநாடுகளில் பங்கேற்றது ஒருபக்கம் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் (இப்படி மாநாடு மாநாடுன்னே போய்க்கிட்டிருந்தா நீ எப்போ போய் மக்களைச் சந்திக்கப்போறே என்று கொப்பளித்த மனச்சாட்சியின் நக்கல் பக்கத்தை  அமைதிப்படுத்திவிட்டு) யோசித்துப்பார்த்தால் நான்கு பெரிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்ற வெளிச்சத்தை இம்மாநாடுகள் அளித்ததை உணர முடிகிறது. 1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு – சென்னை 2.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு – திருப்பூர் 3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு – விசாகப்பட்டினம் 4.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு – விருதுநகர் கட்சியின் தமிழ்மாநில மாநாட்டின் அறிக்கையும் விவாதங்களும் மனசில் ஓடிய எண்ண ஓட்டங்களும் தமிழகத்தின் வரலாற்றினூடாக மார்க்சிஸ்ட்டுகள் நடந்து வந்த பாதையை வரலாற்றில் வைத்துப் பார்க்க…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 6 : உருவம் உள்ளடக்கம் என்னும் பழைய விவாதம்

ச.தமிழ்ச்செல்வன் எர்னஸ்ட்ஃபிஷர் “காலங்கடந்துபோன சமூக உள்ளடக்கத்தைக் காப்பதற்காக ஆளும் வர்க்கம் பழைய வடிவங்களின் பால் -அவற்றைக் கைவிட அது எப்போதும் தயாராக இருந்தபோதும்-ஒரு ஆதரவான தோற்றத்தை மேற்கொள்கிறது.அதே நேரத்தில் புதிய வடிவங்கள் மீது, அவை இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருப்பினும், சந்தேகத்தை விதைக்க அது முயற்சிக்கிறது.அதன்மூலம் புதிய சமூக உள்ளடக்கத்துக்கு அணை போடுகிறது…..    உள்ளடக்கம்; வடிவம் எனும் பிரச்னை கலைக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல.தன் இடம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆளும் வர்க்கம் அல்லது ஆதிக்கக் கலையானது, வடிவம்தான் முதன்மையானது; உள்ளடக்கம் இரண்டாவதுதான் என வாதிடும். எதிர்வினையாற்றும்.கலை,இலக்கியத்தில் தனித்துவமான தன்மையுடன் வடிவம்,உள்ளடக்கம் பற்றிப் பேச வேண்டும்.கலை இலக்கியத்தில் உள்ளடக்கம் என்பது, படைப்பின் பேசுபொருளை அல்லது கருப்பொருளை அல்லது படைப்பு மையமாகச் சொல்லும் சேதியை மட்டுமா குறிக்கிறது?    பொருளும் வடிவமும் இயக்கவியல் ஊடாடலில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.படைப்பின்…

Read More
கடந்து சென்ற காற்று மற்றவை 

கடந்து சென்ற காற்று -4: வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்-மாதொருபாகனை முன்வைத்து…

ச.தமிழ்ச்செல்வன்  கடந்த மாதம் முழுவதும் தலையில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல்தான் இருந்தது. ஊர் ஊராகப்போய்ப் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய காலச்சூழல். புத்தகத்தைப் படிக்காமலேயே அது சாதியையும் திருச்செங்கோட்டுப் பெண்களையும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும் இழிவுபடுத்துவதாக அப்பகுதியின் சாதிய, மதவாத சக்திகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைப்போலவே புத்தகத்தைப் படிக்காமலேயே அதை ஆதரித்துப் பேசிய நண்பர்களையும் எல்லா ஊர்களிலும் பார்க்க முடிந்தது. இதை காலத்தின் நகைச்சுவை என்றுதான் குறிப்பிட வேண்டும். படிக்காமல் எதிர்த்தவர்களுக்கு ஓர் எதிர்மறை அரசியல் இருந்தது. படிக்காமல் ஆதரித்தவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் காக்கப்படவேண்டும் என்கிற நேர்மறை அரசியல் இருந்தது. அப்புத்தகத்தை முன்வைத்து நாம் யோசிக்கவும் பேசவும் வேண்டிய சில முக்கியமான புள்ளிகள் இருக்கின்றன. நாவலின் மையம் குழந்தைப்பேறு இல்லாத  தம்பதிகளின் (காளி-பொன்னாள்) உளவியல் நெருக்கடிதான். சமூகம் அவர்களின் அந்நியோன்யமான காதல் வாழ்வைப் போற்றாமல் ‘புழு பூச்சி இல்லாத…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்

ச.தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று பயிலரங்குகளில் அவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த அக்கல்வி மாவட்டம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முதலிடத்தை இழந்து கீழே இறங்கிவிட்டது. ‘விட்ட இடத்தை’ப் பிடிக்கும் போராட்டத்தின் பகுதியாக முதன்மைக்கல்வி அலுவலரின் (சில சமயம் கல்வியோடு மனரீதியான தொடர்புள்ள அதிகாரிகளும் கல்வித்துறையில் வந்து விடுகிறார்கள்தான்)முன் முயற்சியில் இந்த முகாம்கள் நடந்தன. இயற்பியல், வேதியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களோடு உரையாடினேன். பள்ளிகளில் குழந்தைகளோடு பேசும் வாய்ப்பும் எனக்குத் தொடர்ந்து வாய்க்கிறது. குழந்தைகளோடு பேசுவதற்கும் ஆசிரியர்களோடு பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக பல சமயங்களில் தோன்றும். அதிகாரிகளின் உயிரற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கேட்டு ஒருவித மந்த மனநிலைக்குப் போய்விட்ட அவர்களை (கண்கள் நம்மை நோக்கி விழித்தபடி  இருக்க மனதையும்…

Read More
கடந்து சென்ற காற்று மற்றவை 

இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள்

ஒரு இதழில் கட்டுரை எழுதுவதற்காக எழுத்தாளர் அமரர் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலை சமீபத்தில் மீண்டும் ஒருமுறை வாசிக்க நேர்ந்தது. அல்லது வாய்த்தது.அந்த வாசிப்பு அனுபவம் பகிர்ந்துகொள்ளத் தக்கது . அதற்கு முன்னதாக, என்னுடைய சிறிய முன்னுரை ஒன்று உள்ளது. நான் குறிஞ்சி மலரை முதன் முதலாக வாசித்தது 1972இல். கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். முதலில் நா.பா.வின் பொன்விலங்கு வாசித்தேன்.அதன் இயல்பான அடுத்த கட்டமாக குறிஞ்சி மலரைக் கையில் எடுத்தேன். இவ்விரு நாவல்களும் என் வாழ்க்கையில்  திருப்புமுனையை ஏற்படுத்திய நாவல்கள் என்பேன். பொன்விலங்கில் வரும் சத்தியமூர்த்தியையும் குறிஞ்சி மலரின் நாயகன்  அரவிந்தனையும் அப்போது நான் கதாபாத்திரங்களாக உணரவில்லை. கதையில் இருந்த அவர்களின்  ‘பூமிக்கு வந்த அசல் வடிவமாக’ என்னையே நான் உணர்ந்தேன். உண்மை, நேர்மை, சத்தியம், லட்சியம், இலக்கியம் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு அரவிந்தன் அன்று…

Read More