You are here
நூல் அறிமுகம் 

மார்க்ஸின் “டுசி”

எஸ். கார்த்திகேயன்  மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டனர். அதன் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1850 இல் வெளியிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் விஞ்ஞான சோசலிசத்தின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல உருவாக்கப்பட்டு வந்தன. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸால் அன்புடன் டுசி (Tussy) என அழைக்கப்படும், அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த புரட்சிகரத் தலைவர்களில் ஒருவரான மார்க்ஸின் மகள் எலினார் மார்க்ஸ், அக்கால கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதில், குறிப்பாக உழைப்பாளிப் பெண்களை ஒன்றிணைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகர தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி மற்றும் எழுத்தாளர். எலினார் மார்க்ஸ் அவர்களின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையை, ரேச்சல் ஹோம்ஸ்,…

Read More
மார்க்சியம் 

சீர்திருத்தம் பலனளிக்குமா?

என். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க  வேண்டுமென்று  ஏராளமான  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில்  பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை  வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம்  பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சரியான  புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…

Read More

புரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்

என்.குணசேகரன் மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு  கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா. முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து  சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம்  நடந்தது.  ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது  மூலதன  நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக…

Read More