You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று -7: 3 மாதங்கள் 4 மாநாடுகள் முழுமையான அனுபவங்கள்…

ச. தமிழ்ச்செல்வன் மூன்று மாதங்களில் நான்கு பெரிய மாநாடுகளில் பங்கேற்றது ஒருபக்கம் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் (இப்படி மாநாடு மாநாடுன்னே போய்க்கிட்டிருந்தா நீ எப்போ போய் மக்களைச் சந்திக்கப்போறே என்று கொப்பளித்த மனச்சாட்சியின் நக்கல் பக்கத்தை  அமைதிப்படுத்திவிட்டு) யோசித்துப்பார்த்தால் நான்கு பெரிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்ற வெளிச்சத்தை இம்மாநாடுகள் அளித்ததை உணர முடிகிறது. 1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு – சென்னை 2.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு – திருப்பூர் 3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு – விசாகப்பட்டினம் 4.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு – விருதுநகர் கட்சியின் தமிழ்மாநில மாநாட்டின் அறிக்கையும் விவாதங்களும் மனசில் ஓடிய எண்ண ஓட்டங்களும் தமிழகத்தின் வரலாற்றினூடாக மார்க்சிஸ்ட்டுகள் நடந்து வந்த பாதையை வரலாற்றில் வைத்துப் பார்க்க…

Read More
தூரத்து புனையுலகம் 

தூரத்துப் புனைவுலகம் – 17 உருகி ஓடும் சொற்களின் பாதை

ம. மணிமாறன்   நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல் போகிறபோது மரபினில் ஐக்கியமாவதும், அதன் பெருமைகளை ஊதிப் பெருக்கிப் பேசுவதும் தவிர்க்க முடியாத செயலாகிப் போகிறது பலருக்கும். மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கற்க முயல்பவர்களே புதிய எல்லைகளை அடைகிறார்கள். இது எல்லாத் துறைகளையும் போலவே இலக்கியத்திற்கும் கூட பொருந்தும். அதிலும் குறிப்பாக புனைகதைகளுக்கு மிகவும் பொருந்தும். நூற்றைம்பது வருட புதின இலக்கியவரலாற்றில் புதிய, புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வடிவத்தைக் கலைத்து அடுக்குவது, வடிவமேயில்லாத புதிய வடிவத்தை உருவாக்குவது எனப் புதிய எழுதுதல் முறைகள் இன்றுவரையிலும் புதிது புதிதாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வடிவத்தில் மட்டுமில்லாது கருத்தியல் ரீதியாக பொருளடக்கத்திலும் கூட புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. இப்போது யாரும் தனிநபர் ஒருவரின்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

– கவிப்பித்தன் வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே…

Read More