இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

    • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, மதம்சார்ந்த அடையாள அரசியலின்கீழ் ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள்குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். • பன்முகப் பண்பாடுகளின் கலவையாகத்  திகழும் இந்திய மக்களை, ஒற்றை அடையாளம் என்னும் பட்டிக்குள் தள்ளுகிற முயற்சியின் காரணமாக சிறுபான்மை மக்களை அந்நியர்களாகவும், இந்தியப்பண்பாட்டின் விரோதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு அபாயகரமான எல்லைக்கு வளர்ந்திருப்பதையும்; மதவாதக் கருத்துகள் சாதியரீதியான வன்முறைகளை ஊக்குவிப்பதால் தலித்துகள்மீதான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்துவருவதையும் கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். • எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் திட்டமிட்ட முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வுகள் நாட்டிலுள்ள சுயசிந்தனையாளர்கள் அனைவருக்குமான அச்சுறுத்தல் என்பதை கவனப்படுத்துகிறோம். •   வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும், மத்திய அளவிலும் மாநில…

Read More