You are here
நூல் அறிமுகம் 

விடுதலைப் போரில் 25 கம்யூனிஸ்ட்டுகளின் நினைவலைகள்

வீ.பா.கணேசன் அந்நிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டம் என்பது நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கதாகும். இந்தியாவில் வணிகம் செய்ய வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியும் அதனோடு போட்டியிட்டுக் கொண்டு வந்த ஃப்ரெஞ்சு, டச்சு, போர்ச்சுக்கீசிய நாடுகளின் கம்பெனிகளும் படிப்படியாகத் தங்களின் ஆளுகையை விரிவுபடுத்திக் கொண்டே வந்தபோது அவர்களின் ஆதிக்க வெறியை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்து மைசூர்ப் போரில் உயிர்நீத்த மாவீரன் திப்புசுல்தான் முதல் 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கடற்படை மாலுமிகள் நடத்திய வீரஞ்செறிந்த தல்வார் போராட்டம் வரை இந்திய விடுதலைப் போராட்டம் என்பது ஈடுஇணையற்ற தியாகங்களுடன் நடை போட்ட வீர வரலாறாகும். இதனுள்ளே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என மார்க்ஸ் குறிப்பிட்ட 1857 ஆம் ஆண்டு படைவீரர் எழுச்சி, தேபகா விவசாயிகளின் எழுச்சி, இண்டிகோ விவசாயிகள் எழுச்சி, மாப்ளாஸ் எழுச்சி, வார்லி…

Read More
கட்டுரை 

பீமாயணம்

சு.ப.பாரதி கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச  நான்  விரும்பினேன்.  பீமாயணத்தைப்பற்றி பேசுகின்றாயா? என்று கேட்டபோது ஆம்.. என்று கூறினேன்.அப்போது அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்,  அவர்தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களை வடிவமைத்தார் போன்ற சில செய்திகளை மட்டுமே அறிந்திருந்தேன். பின்னர் பீமாயணம்  படிப்பதோடு  நிறுத்திக்கொள்ளாமல் அம்பேத்கர் குறித்த படம், ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படம், அம்பேத்கரின் இறுதிப்பேச்சு  (ஙிஙிசி ஷிஜீமீமீநீலீ),  அருந்ததிராயின் பேச்சு மற்றும் விக்கிபீடியா முதலியவற்றைப் பார்த்தும் படித்தும் அம்பேத்கரைப்பற்றி கூடுதலாக அறிந்தேன். அம்பேத்கர் தனது சிறுவயதிலிருந்தே தண்ணீர்,  இருப்பிடம்  முதலிய தனக்கான அன்றாடத் தேவைகளைப் பெறக்கூட மிகவும் துன்புற்றார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரைத்தொட…

Read More