உடல் திறக்கும் நாடக நிலம் – 12: பூ மரத்துடன் பேசவரும் தேன்சிட்டுகள்…

முருகபூபதி  உலகில் ஜீவராசிகளைத் தழுவிச் சென்றபடி அவற்றோடு சுவாசமாகிவிட்ட காற்றின் உருவற்ற உணர்நிலைகளைப் போல ஆதியில் மரங்கள் சுமந்த மனிதனின் இருப்பு இயற்கையின் அதியற்புத விதிகளில் ஒன்றாகியிருந்தது. மனித நிலை முழுதாய் புகுந்துவிட்ட அதன் பழுத்த இலைகள் உதிர்வதைப்போல உதிர்ந்து வீழ்ந்து மரத்தின் சுவாசத்திடமிருந்து தனித்து விடப்பட்டு இன்று வரை வெகுதூரம் தன்னைத்தானே துரத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் உலகமெங்கும் எழுந்து வரும் மரங்கள் தன்னைவிட்டுப்போன மனிதனுக்காக நாட்டிய மாடியபடி இவைகளின் படபடப்பிசையில் எதிர்கால சந்ததியர்களுக்கான ஆதிவயல்களுக்குள்ளிருந்து குலவை மொழுகிய தானியங்களின் ரேகைகளோடு பாடிக் கொண்டிருக்கிறது. பறவைகளின் மொழியிசை அறிந்த மரங்களும் கொடிகளும் செடிகளும் உலகில் இருப்பதாலேயே இவ்வுலகம் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. நிலத்தை அன்னையின் மடியாக உறவு கொள்கிற பண்பாடு நம்முடையது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலமே தமிழ் வாழ்வின் அடையாளம் எனலாம். களர்…

Read More