You are here

மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…

ஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது – நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை) மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே…

Read More
கட்டுரை 

குழந்தைகளுக்கு கதை சொல்வதன் அவசியம்

சே. இராஜேந்திரன் கதைசொல்லி குழந்தைகளை மகிழ்விப்பது என்பது சங்ககாலங்களிலிருந்தே இருந்து வரும் பழக்கம். கதை கூறல் எனும் சக்தி மிக்க உத்தி குழந்தைகளை நல்வழிப்படுத்த உதவும் ஒரு கருவி. இந்த சக்தி மிக்க உத்தி பெரியவர்களையும் நல்வழிப்படுத்தியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக உலகப் புகழ் பெற்ற அரபுக்கதைகள் என்னும் ஆயிரத்தோர் இரவில் சொல்லப்பட்ட கதைகள் சாமர்கண்ட் பேரரசர் ஷாரியரின் ஆர்வத்தைத் தூண்டவென்றே கூறப்பட்டவை. பெண்ணினத்தின் மேல் அவநம்பிக்கை கொண்ட மன்னர் நாள்தோறும் ஒரு பெண்ணை மணந்து அடுத்த நாள் அதிகாலையில் அவளுக்கு மரணதண்டனை விதித்துக் கொன்றுவிடும் கொடிய வழக்கத்தைக் கொண்டிருந்தார். யாராலும் அவரை மாற்ற முடியவில்லை. நாட்டில் கன்னிப் பெண்களே கிடைக்காத நிலை உருவாக, அமைச்சர் கவலை கொள்ள… அமைச்சரின் புத்திசாலியான மூத்த மகள் ஷகர்ஜத் தந்தைக்கு உதவ முன் வருகிறாள். மன்னனை மணக்கிறாள். கொலைத்…

Read More