You are here
அஞ்சலி 

மரணமில்லா எழுத்து

-சா. கந்தசாமி    தமிழ் நவீன புனைகதை இலக்கியத்தில் தன் படைப்புக்கள் வழியாகவும் அங்கீகாரம் பெற்றவர் ஜெயகாந்தன். கடலூர் மஞ்சக் குப்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தவர். வடசென்னை என்று அறியப்படும் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிகள் வாழும் பிராட்வே, தங்கசாலை, லோன்ஸ்கெயர் எல்லாம் அவருக்குப் பழக்கமான இடங்களாக இருந்தன. பால்ய காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் கம்யூனில் இருந்தார். அவருக்கு கம்யூன் வாழ்க்கை, சமூகம் பற்றிய பார்வையைக் கொடுத்திருந்தது. கதைகள் எழுத ஆரம்பித்தப் போது, தான் அறிந்த சென்னை நடைபாதை வாசிகள், லோன்ஸ்கெயர் பகுதி மக்களின் வாழ்க்கையை அவர்கள் பேச்சை முதன்மையாகக் கொண்டெழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்த கதைகள் இல்லை என்பது மட்டுமல்ல அவற்றுக்கு எதிரான கதைகள். ஆனால் உயிர்த் துடிப்புக் கொண்ட அசலான கதைகள் வாழ்க்கை என்பதற்கு…

Read More
நூல் அறிமுகம் 

ஜெயமோகன் உருவாக்கிய புதிய கதாமாந்தர்கள்

கீரனூர்ஜாகிர்ராஜா ஜெயமோகனின் முந்தைய கதைகளிலிருந்தும்    மாறுபட்ட தன்மைகளுடன்  வெளிவந்த ‘அறம்’ தொகுப்பின் அநேகமான கதைகள் என் வாசிப்பனுபவத்துக்கு உவப்பாக இருந்தன. அதிலும் அந்த ‘சோற்றுக் கணக்கு’ கதையை எனக்காகவே எழுதியிருந்தாரோ என்றுகூட தோன்றியது. ஏனெனில் ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பில் அவருடைய கதை ஒன்றைச் சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை அவரிடமும் தெரிவித்திருந்தேன். அவருடைய கதை மட்டுமல்ல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், கோணங்கி எனப் பலருடைய கதைகளும் அதில் விடுபட்டிருந்தன. விடுபட்டிருந்தன என்றால் தவிர்த்துவிட்டதாக அர்த்தமில்லை. அப்படியான கதைகளை அவர்கள் எழுதியிருக்கவில்லை. பிறகு நான் நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் காதல் கதைகளை  ‘அழியாத கோலங்கள்’ என தொகுத்தபோதும் அவருடைய ‘நிழலாட்டம்’ கதையைத்தான் சேர்க்க நேர்ந்தது. ‘கிளிக்காலம்’ கதையைத்தான் அத்தொகுப்பிற்குள் கொண்டுவர நினைத்தேன். ஜெ. ஏனோ அது வேண்டாம் என்றார். நவீன எழுத்தாளர்கள் ஏன் காதல்…

Read More

இது ஆண்களின் உலகமாக மட்டும் இருக்கக்கூடாது…

கவின் மலர்

கேள்விகள் : கொங்கு நாடன்

1. ஊடகவியலாளராகிய நீங்கள் புனைவெழுத்தின் பக்கம் வர நேர்ந்த சந்தர்ப்பம் குறித்து கூறுங்கள்…

என் முதல் கவிதை, சிறுகதை இரண்டுமே சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தன. கட்டுரைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நேர்ந்த மறக்க முடியாத ஒரு வேதனையான அனுபவம் உள்ளுக்குள் சீற்றத்தை உண்டுபண்ணியது. அந்த சீற்றத்தையே ‘முகவரியற்றவள்’ என்று தலைப்பிட்டு கவிதையாக்கி ’உயிர்எழுத்து’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கவிதை வெளியாகவில்லை. அக்கவிதையோடு அனுப்பி வைத்த இன்னொரு கவிதை ‘பெருவெளி’ வெளியானது. அதுதான் பிரசுரமான முதல் கவிதை. எனினும் சில மாதங்கள் கழித்து ஆனந்தவிகடனில் ‘முகவரியற்றவள்’ கவிதை வெளியானது. சிறுகதைக்குள் செல்ல வைத்தது ஆனந்த விகடன் ஆசிரியர் ரா. கண்ணனின் வார்த்தைகள்தான். அவர் சொன்னபடி முயன்றுபார்த்தால் என்ன என்று தோன்றி எழுதியதுதான் ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்கிற முதல் சிறுகதை. அதுவும் ‘உயிர்எழுத்து’ இதழில்தான் வெளியானது.

Read More