You are here
மற்றவை 

படித்ததில் பிடித்தது 50க்கு50

ஆயிஷா இரா. நடராசன் 1. பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரொவ் தமிழில் வீ.பா.கணேசன்/ பாரதி புத்தகாலயம் ஜெர்மனி, ஹிட்லரின் ஜெர்மனியாக இருந்த 1930களின் மிகப் பிரபலமான வழக்கு. கம்யூனிஸ்ட்களை ஹிட்லர் எப்படி ஆக்ரோஷமாகப் பழிவாங்கி பலி கொடுத்தான் என்பதற்கான ரத்தசாட்சியம் இந்தப் புத்தகம். 1982ல் டிமிட்ரோவ் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பிரபலமான நூல். பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாமகர், மார்க்சிய சித்தாந்தப் பேராசான்களில் ஒருவர் டிமிட்ரொவ். கோயபல்ஸ் நோக்கிய டிமிட்ரோவின் நீதிமன்றக் கேள்விகள் (பக்கம் 56) அசத்தலானவை. இன்றைய காலச் சூழலுக்கும் பொருந்துபவை. 2. ஓவியா இரா. மீனாட்சி/ கபிலன் வெளியீடு. தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் கவிஞர் இரா. மீனாட்சி ஆரோவில் வளாகத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். “அம்மா அழுகையை மென்று விழுங்கினார். அதுவே அன்றைய இரவு உணவும் ஆயிற்று” போன்ற நெஞ்சை அறுக்கும்…

Read More
நூல் அறிமுகம் 

எமது புதிய வெளியீடுகள்

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் டெரி ஈகிள்டன் , தமிழில்: அ.குமரேசன், பக். 96 | ரூ.65 மானுடத்தின் முழு விடுதலைக்குப் போராடும் உறுதியை வலுப்படுத்தவே மார்க்சியத் திறனாய்வு என்பதை வாதத்திற்கான கருத்தாக இல்லாமல் வரலாற்றுச் சான்றாகவும் விளக்கி வாழ்க்கைப் பாடமாக்கியிருக்கிறார் டெரி ஈகிள்டன் இந்நூலில். விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் சீத்தாராம் யெச்சூரி , தமிழில்: ஹேமா, பக்.224 | ரூ.140 நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, அந்தப் போராட்டத்தை வலுவாக்கித் தீவிரப்படுத்தியதில் கம்யூனிஸ்டு களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய 25 தியாகிகளின் விடுதலைப் போராட்ட நினைவலைகளே இந்நூல். ரோசா லக்ஸம்பர்க் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி, பக்248 | ரூ.160 14 தொகுதிகளில் விரியும் ரோசா லக்ஸம்பர்க்கின்  ஆழமும் ஒளியும் நிரம்பிய எழுத்துகள் பெருமளவு தமிழுக்கு…

Read More
நூல் அறிமுகம் 

சித்தார்த்தன்: வாழ்வும் தேடலும்

சா. கந்தசாமி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் காண பெற்றோர்களைத் துறந்து கோவிந்தன் என்னும் தோழனோடு சேர்ந்து கொண்டு போகிறான். நெடும்பயணத்தில் தோழனைத் துறந்து சமணனாகி அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகி அலைகிறான். அவன் நன்குக் கற்றவன். தன்னையும், உலகத்தையும் அறியும் ஞானம் பெற்று இருக்கிறான¢. அவன் ஞானமே அவனை அலைய விடுகிறது. அலைந்து திரியும் அவன் கௌதம சித்தார்த்தர் ஞானமுற்று, காவியுடையணிந்து தானமேற்று உபதேசம் புரிந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் படுகிறான். அவரைக் காணவும் அவரின் அருளுரையைக் கேட்கவும் அவாவுற்று தோழன் கோவிந்தனுடன் செல்கிறான். சாவதி நகரத்தில் சித்தார்த்தன் முதலில் புத்தரைப் பார்த்தான். கடவுளே வந்து வழிகாட்டியதுபோல இருந்தது. பொன்நிற உடை அணிந்து, துறவுக் கோலத்தில் அகந்தை என்பதை அழித்துவிட்டு நிதானமாகத் தான கலயத்தோடு நடந்து செல்லும்…

Read More