You are here
நூல் அறிமுகம் 

படிக்கவும், விமர்சிக்கவும் கூடிய சுய சரித்திரம்

    ல்லோர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்ல விரும்பிய விதத்தில் சிலர் எழுதி வைத்து இருக்கிறார்கள்.  அதுதான் சுயசரித்திரம். சுயசரித்திரத்தில் உண்மையாகவே சொல்லப்பட்டது குறைவு என்றும், சொல்லப்படாதது மறைத்து ஒளித்து வைத்திருப்பது அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. எத்தனைதான் மறைத்தாலும், சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாததைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதுதான் சுயசரித்திரம் என்பதைப் படிக்க வைக்கிறது. ‘எனது போராட்டம்’ என்பது ம.பொ.சி. என்று அறியப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞான கிராமணி எழுதியிருக்கும் சுயசரித்திரம். அவர்க்கு சுயசரித்திரம் எழுதிவெளியிடும் போது அறுபத்தாறு வயதாகி இருந்தது. அவர் தமிழ் மட்டுமே படித்திருந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், ஆறு முறைகள் சிறை சென்றவர். அதில் இரண்டு முறை சுதந்திர இந்தியாவில் தன் இலட்சியங்களுக்காகச் சிறைப்பட்டார். காங்கிரஸ் தொண்டராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் சொந்த முயற்சியால் தமிழ் படித்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தைத்…

Read More
நூல் அறிமுகம் 

அறிவதும் எழுதுவதும்

சா. கந்தசாமி இந்த  83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும் முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை படிப்போருக்கு ரசமாகவும் இருந்தது, நம் காலத்தையே புரிந்துகொள்வது எவ்வளவு கடினமானது என்று நினைக்க வைத்தால் என் முயற்சி பயனில்லாமல் போகாது’ என்று அசோகமித்திரன் குறிப்புடன் வெளிவந்து இருக்கும் புத்தகம் ‘நடைவெளிப் பயணம்’. நடைவெளிப் பயணம் 83-வது வயதில் எழுதப்பட்டதாகக் குறிப்பு ஒன்று இருக்கிறது. எழுத்து என்பது வயது சம்பந்தப்பட்டது இல்லை. இளம்வயதில் நன்றாக எழுதியவர்கள் வயதாக வயதாக ஆற்றல் குன்றி, அறிவு மங்கி எழுதி இருப்பதும், இளம்வயதில் தட்டுத்தடுமாறி, எழுதி எழுதி தன் எழுத்தை மேலாக, தரமாக எழுத்தாக மாற்றிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அசோகமித்திரன் இந்த இரண்டிலும் இல்லை. அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தரம் என்றும் மேலான தரத்திலும், சுவாரசியமாகவும் படிக்கத்தக்க விதமாகவும் எழுதி வருகிறார் என்பதற்கு நடைவெளிப் பயணம்…

Read More
மற்றவை 

சாயாவனம் நாவலுக்கு வயது 50 வயது

கீரனூர் ஜாகிர்ராஜா உடல் சுகவீனத்தின் காரணமாக மருத்துவரின் கட்டளைப்படி ஒருமாதத்திற்குப் பக்கம் தஞ்சாவூரில் சிகிச்சையிலிருந்த காலம் அது. ஒரு நாள் கோவையிலிருந்து என் நண்பர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பேச்சினூடாக “இந்த இடைவெளியில் ஒரு நாவல் உருவாகிவிடும்…” என்றும் ஒரு போடு போட்டார். அவர் வாதாடுகிறவர், வழக்கறிஞர். அவர் வாக்கு பலிதமாகியிருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். நடக்கவில்லையே… ஓய்வுப் பொழுதுகளில் எல்லாம் எழுத வாய்க்கிறதா என்ன? அதுவும் அந்நாட்களில் மூன்று வேளைக்கும் சேர்த்து 25க்கும் அதிகமான குளிகைகளை நான் விழுங்கிக் கொண்டிருந்தேன். உபரியாக, கசப்புக் கூடிய டானிக்குகள் வேறு. அலோபதி! அதன் குணம், ஆளை அடித்துச் சுருட்டிக் கிடத்துவதுதான் போலிருக்கிறது. நாட்கள் இவ்வாறு கடந்தபொழுது நாவலாவது… ஒருநாள் படுக்கையிலிருந்தவாறு என் புத்தகச் சேகரிப்புகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புதின அடுக்குகளின் மேல் கண்கள் கம்பளிப்புழுவாய் ஊர்ந்தன….

Read More
அஞ்சலி 

மரணமில்லா எழுத்து

-சா. கந்தசாமி    தமிழ் நவீன புனைகதை இலக்கியத்தில் தன் படைப்புக்கள் வழியாகவும் அங்கீகாரம் பெற்றவர் ஜெயகாந்தன். கடலூர் மஞ்சக் குப்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தவர். வடசென்னை என்று அறியப்படும் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிகள் வாழும் பிராட்வே, தங்கசாலை, லோன்ஸ்கெயர் எல்லாம் அவருக்குப் பழக்கமான இடங்களாக இருந்தன. பால்ய காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் கம்யூனில் இருந்தார். அவருக்கு கம்யூன் வாழ்க்கை, சமூகம் பற்றிய பார்வையைக் கொடுத்திருந்தது. கதைகள் எழுத ஆரம்பித்தப் போது, தான் அறிந்த சென்னை நடைபாதை வாசிகள், லோன்ஸ்கெயர் பகுதி மக்களின் வாழ்க்கையை அவர்கள் பேச்சை முதன்மையாகக் கொண்டெழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்த கதைகள் இல்லை என்பது மட்டுமல்ல அவற்றுக்கு எதிரான கதைகள். ஆனால் உயிர்த் துடிப்புக் கொண்ட அசலான கதைகள் வாழ்க்கை என்பதற்கு…

Read More
நூல் அறிமுகம் 

சித்தார்த்தன்: வாழ்வும் தேடலும்

சா. கந்தசாமி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சித்தார்த்தன் என்ற பிராமண இளைஞன் வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் காண பெற்றோர்களைத் துறந்து கோவிந்தன் என்னும் தோழனோடு சேர்ந்து கொண்டு போகிறான். நெடும்பயணத்தில் தோழனைத் துறந்து சமணனாகி அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகி அலைகிறான். அவன் நன்குக் கற்றவன். தன்னையும், உலகத்தையும் அறியும் ஞானம் பெற்று இருக்கிறான¢. அவன் ஞானமே அவனை அலைய விடுகிறது. அலைந்து திரியும் அவன் கௌதம சித்தார்த்தர் ஞானமுற்று, காவியுடையணிந்து தானமேற்று உபதேசம் புரிந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் படுகிறான். அவரைக் காணவும் அவரின் அருளுரையைக் கேட்கவும் அவாவுற்று தோழன் கோவிந்தனுடன் செல்கிறான். சாவதி நகரத்தில் சித்தார்த்தன் முதலில் புத்தரைப் பார்த்தான். கடவுளே வந்து வழிகாட்டியதுபோல இருந்தது. பொன்நிற உடை அணிந்து, துறவுக் கோலத்தில் அகந்தை என்பதை அழித்துவிட்டு நிதானமாகத் தான கலயத்தோடு நடந்து செல்லும்…

Read More

வாழ்வே உன்னதம்!

மனிதர்கள் எங்கே பிறந்திருந்தாலும், எந்த சமயத்தைச் சார்ந்து ஒழுகினாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது தனியான வாழ்க்கை; கற்ற எதனோடும் சம்பந்தப்பட்டதில்லை. அதனை அறிந்து கொண்டு வாழ்வதென்பது ஒன்று; அறியாமல் வாழ்வதென்பது இன்னொன்று. அதுதான் சொந்த வாழ்க்கை. சிலர் தன் சொந்த வாழ்க்கையை அறிந்த விதமாகவும் பலர் அறியாத முறையில் வாழ்ந்த வாழ்க்கையை அறிந்த விதமாகவும் எழுதியிருக்கிறார்கள். அதுதான் சுயசரித்திரம். சுய சரித்திரம் ஒன்றுதான் என்றாலும் எல்லோருக்கும் ஒரு சுயசரித்திரம் கிடையாது. மனிதர்கள் வேறுவேறு விதமாக வாழ்வதுபோல அவர்கள் எழுதும் சுயசரித்திரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது.

Read More

சா.கந்தசாமி என்ற பயிற்சியாளன்!

புத்தகங்கள் எப்போதும் பரவசமூட்டுபவை. அதன் புதுவாசனை அல்லது அதன் பழைய பழுப்புத்தூசி வாசனை கிளர்ச்சியூட்டுபவை. பேரிலக்கியங்கள் என்பதில்லை. தனிமனிதன் தன் சொந்த வாழ்க்கை பற்றி நாணயமாக எழுதப்பட்டதுதான் நிலைத்திருக்கிறது. ‘புது எழுத்து’ கட்டுரையில் விவரிக்கிறார். உண்மையில் அது இதயத்திலிருந்து வருவதால் பேரிலக்கியமாகிறது. இவ்வாறான எழுத்துக்கள் முதன்மை பெறவேண்டும். தலைமையேற்க வேண்டும். நாணயமான எழுத்துக்களே நிலைபெறும்; மொழிக்கு வளம் கூட்டும்.

Read More

தடை செய்யப்படும் புத்தகங்களும் எரிக்கப்படும் புத்தகங்களும்

சா. கந்தசாமி புத்தகங்கள் படிக்கவே எழுதப்படுகின்றன. அவை மனித அறிவு என்பதன் உச்சம். தங்களிடம் மானிட சமூகத்தின் உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் கருத்து இருக்கிறது என்று நம்பியவர்கள்; எல்லோர்க்கும் மகிழ்ச்சி தரும் கதை இருக்கிறது, கவிதை உள்ளது என்று நம்பியவர்கள் எழுதினார்கள், எழுதி வருகிறார்கள். எழுதுவதும் படிப்பதும் சமூகத்தில் இழையறாமல் இருந்து வருகிறது. மனித சரித்திரம் என்பதே எழுதப்பட்டது படிக்கப்பட்டதின் சரித்திரமாக இருக்கிறது. அதன் காரணமாகவே புத்தகங்கள் புனிதமானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. எழுத்துக்கு ஆதாரமானது மொழி. பேசும் மொழியும், அதனை எழுதும் எழுத்தும் மனிதர்களுக்கு இறைவன் அருளால் அளிக்கப்பட்டது. எனவே அவற்றை இறைவனைத் துதிக்கவும், நன்மொழிகள் பேசவும், நல்லவற்றை எழுதவும் பயன்படுத்த வேண்டுமென்று நெடுங்காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். வெகு பழமையான நூலாகிய ரிக்வேதம் இறைவனைத் தொழுது பணிந்துபாடும் பாடல்களைக் கொண்டு இருக்கிறது. புத்தரின்அருளுரைகளின் சாரத்தை அசோகர் கல்வெட்டுக்களில்…

Read More

விற்ற புத்தகங்கள் படித்த புத்தகங்கள்

சா.கந்தசாமி 2014 ஜனவரியில் சென்னையில் பப்பாசியின் 37வது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் எழுநூறு அரங்குகளில் 5,00,000 தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றன. அதில் பெரும்பான்மைத் தமிழ்ப் புத்தகங்கள். ஏராளமாக மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்தார்கள். நிறைய புத்தகங்கள் விற்பனையாகின என்று விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். புத்தகங்கள் எழுதுவது, அச்சிடுவது விற்பனைக்குத்தான். புத்தகக் கண்காட்சிகள் அதற்கு முதன்மையாக இருக்கின்றன. இந்தியாவில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக இருக்கிறது என்கிறார்கள். அது வெறும் விற்பனைக்கான காட்சி இல்லை. எழுத்தாளர்கள், வாசகர்கள், விற்பனையாளர்கள் என்று எல்லோரும் கலந்து கொள்ளும் ஒரு கலாச்சாரத் திருவிழாவாக இருக்கிறது. எழுதுவதும், படிப்பதும் நெடுங்காலமாக நடந்து வருகிறது. மனித வளர்ச்சி என்பதில் இது முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது. பழங்காலத்தில் கற்பாறைகளிலும் செம்புப் பட்டையங்களிலும், பனைவோலைகளிலும், எழுதிப் படித்தார்கள். படிப்பு என்பது…

Read More