You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை, என் போராட்டம் என் அறிவியல்-4 : அப்படியே விழுங்கிய புத்தகங்கள்….

சோ. மோகனா        ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை விட, வெளியே  ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே  இருக்கிறது.”….      பிரடெரிக் எங்கெல்ஸ் நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.”…  கரோலின் கோர்டன். வாசிப்பின்.. வாசல் ..இது..! மேலே கூறப்பட்ட இரு தலைவர்களின் பொன்மொழிகளும் என் வாழ்க்கையில் அனுபவப் பூர்வமாக உணரப்பட்டவை; இரு நாட்களுக்கு முன், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வெளிவந்த அம்பேத்கர் சாதி ஒழிப்பு,(டாக்டர். அம்பேத்கர் ), அம்பேத்கர் என்ன சொல்கிறார்? (கே. சாமுவேல்ராஜ்),மற்றும் சாதி, வர்க்கம், மரபணு (ப.கு.ராஜன்), மூன்று புத்தகங்களையும்,கையில் எடுத்துப் புரட்டி, முன்னுரை,முகவுரை,உள்ளே சில பக்கங்களையும், படித்தேன்..உடனே மனம் ஒரு 55 ஆண்டுகளுக்கு முன் பாய்ந்து ஓடியது. அத்துடன்  நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 1958ல்  பள்ளி ஆசிரியர்களால்…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சுருக்கெழுத்து வருவதற்கு முன்பே சுருக்குத்தமிழ் பேசியவர்கள் எமது வடமாவட்ட மக்கள்

– கவிப்பித்தன் வட்டார வழக்குகளில் வெளிவரும் படைப்புகள் தமிழ் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சூழலில், இன்னும் உரிய அடையாளம் பெறாத வடமாவட்ட வழக்காற்றில் களம் அமைத்து தொடர்ந்து படைப்புகளை அளித்துவரும் வெகு சிலரில் கவிப்பித்தனும் ஒருவர். தன் ”இடுக்கி“ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பயணத்தை துவங்கிய கவிப்பித்தன், பின் ”ஊர்ப்பிடாரி”, ”பிணங்களின் கதை” (2014) என்று தொடர்ந்து பயணித்து, சமீபத்தில் “நீவாநதி” நாவலின் மூலம் புதிய தடத்தை அடைந்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் வாலாஜாவைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பித்தன் முதலில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றி, தற்போது அரசு வணிகவரித்துறையில் பணிபுரிந்துவருகிறார். பள்ளிப்பருவ பொது இலக்கிய ஆர்வம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு, களப்பணி, அதனூடாக சிறுபத்திரிகை மற்றும் எதார்த்த இலக்கிய வாசிப்பு எனத் தன் இலக்கிய அனுபவங்களை வளர்த்துக்கொண்டவர். தொண்ட வரண்ட தொண்டை மண்டலத்தின் மண்ணும் மனிதர்களுமே…

Read More

கருத்து சுதந்திர உரிமைப் போர் தொடரட்டும

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்தி வரும் எழுச்சிமிகு உரிமைப் போர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 2010ல் எழுதப்பட்ட ஒரு படைப்பு மாதொரு பாகன். குழந்தைப் பேறில்லா தம்பதியர் கோவில் தேர் இழுத்தால் பிரார்த்தனை நிறைவேறும்  எனும் நம்பிக்கைக்குப் பின்னால் நடக்கும் உலகறிந்த உயர்சாதி வக்கிரத்தைத் தோலுரித்த படைப்பு. ஆனால் 2014ல் எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது மாவட்டமான நாமக்கல் (திருச்செங்கோடு) தனியார் மேல்நிலைப் பள்ளிகளின் பணமுதலைகள் அடிக்கும் பகல் கொள்ளையைக் கடுமையாக விமர்சித்து எழுதியதும், பிரச்சனையை எதிர்கொள்ளவும் பதில் தரவும் திராணியற்ற பணம் படைத்தோர் கூட்டம் அவரது படைப்புகளுக்கு சாதி வர்ணம் பூசி இந்துத்வா வெறியாட்டத்தைத் தொடங்கி  அதை அரசின் அதிகார அமைப்புகள் ஆதரவோடு தனது ‘சிவ தாண்டவத்தை’ காவி தர்பாரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த உண்மைகளை…

Read More