மீண்டெழும் மறுவாசிப்புகள் 10 : ஹஸ்தினாபுரத்தின் காற்றுகள்

ச.சுப்பாராவ்     இதுவரை எழுதப்பட்ட மறுவாசிப்புகள் பெரும்பாலும் பாரதத்தின் முக்கிய மாந்தர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றன. அதுவும் பெண் பாத்திரத்தின் வழியான மறுவாசிப்பு என்றால் பாஞ்சாலியைத் தவிர வேறு யாரும் படைப்பாளிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும், அந்த மஹாபாரதத்தில்தான் எத்தனை எத்தனை பெண்கள்! எல்லா வர்ணத்தைச் சேர்ந்த பெண்களும் வருகிறார்கள். எல்லோருக்கும் விதவிதமான துயரங்கள்! ஒருபக்கம் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியவளாக கம்பீரமாக உலா வரும் அதே பாத்திரத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால், அவள் வெளியே சொல்லாத சோகம் அவளது சாதனைக்கு, சந்தோஷத்திற்கு, வெற்றிக்கு,     இணையாக ஓடிக்கொண்டே இருக்கும். வானுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கையானாலும் சரி, மீனவ இனப் பெண்ணாகப் பிறந்து குருவம்சத்தின் பட்டத்தரசியான சத்யவதியானாலும் சரி; வெளியில் சொல்ல முடியாத துக்கம்தான் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அது இன்று ஒரு படைப்பாளியின் கண்களில் பட்டு…

Read More