You are here

ஒரு பெண்ணின் சாகசப் பயணம்

சேகு எலிஸாஃபே இங்கிலாந்தை சேர்ந்த 24 வயதுப் பெண். தனது கணவரான அந்தோனிஃபேவுடன் இந்தியப் பயணத்தை 1779-ல் இங்கிலாந்திலிருந்து, தொடங்கினார். இந்தியாவில் பாரிஸ்டராக பதிவு செய்து, கல்கத்தாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் நடத்தி, நிறைந்த செல்வமும், வளமான வாழ்க்கையும் வாழலாம் என கற்பனை செய்தவாறு, தனது கணவர் ஃபேயுடன் எலிஸா புறப்பட்டார். இங்கிலாந்திலிருந்து ஐரோப்பா வழியாக ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஊடாக, பிரான்ஸ், இத்தாலி வழியாக ஜெனோவா துறைமுகம் வந்தடைந்து, மரக்கலம் மூலம் கெய்ரோ வரையும், பிறகு செங்கடல் வழியாக பாய்மரக் கப்பல் மூலம் கள்ளிக்கோட்டை வந்தடைந்தார். பின் கோவாவிலிருந்து சென்னை வந்து, கல்கத்தா சென்றடைந்தார். இந்தப் பயணம் சுமார் ஒரு வருடகாலம் நீடித்தது. வழிப்பறிக் கொள்ளையர்களிடம், எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக் கொண்டு பொருள்களை இழந்து, சிறைப்படுத்தப்பட்டு, பலவித இன்னல்களைச் சந்தித்து கல்கத்தா சென்றடைந்தார். இதில் ஏன் அவர்…

Read More
நூல் அறிமுகம் 

நேயமும் தோழமையும் சமத்துவமும் விழையும் குரல்….

எஸ்.வி. வேணுகோபாலன் நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. நகரமயமாக்கலில் நாம் இழக்கும் நேயத்தை, பறிகொடுக்கும் பறவை உறவுகளைப் பேசுகிறது தலைப்புக் கதை. வெளுப்பான தலையை சாயமிட்டுக் கருப்பாக்கிக் கொள்வதை குழந்தைகள் செல்லக் கிண்டலுடன் நிராகரிப்பதைச் சொல்கிறது ‘நரைப்பூ’.   புறக்கணித்த பெற்றோரும் பிள்ளைகளின் கஷ்ட காலத்தில் துணைக்கு வரும் அன்பை எடுத்துரைக்கிறது ‘தொப்புள் கொடி’. ‘மீட்பு’ கதை, வழியில் கிடைக்கும் பணப் பையை நாமே வைத்துக் கொள்ளலாமா, உரியவரிடம் சேர்த்து விடலாமா என்ற மனித மனத்தின் சஞ்சலத்தை விவாதிக்கிறது. இறுதியில் நேர்மை மேலோங்குமிடத்தில், மனித நேயமும் பொங்குவதை ஜனநேசன் முன்னிலைப்படுத்துகிறார். ‘உறுத்தல்’ கதை, …

Read More
நூல் அறிமுகம் 

மதுரையை வரையும் சித்திரக்காரன்

கீரனூர்ஜாகிர்ராஜா ஓவியர் ரஃபீக்கின் ‘‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’’ எனும் இப்பிரதியை வாசிக்கக் கிடைத்த அனுபவம் சுவாரஸ்யமானது. இந்நூல் ரஃபீக் பிறந்து வளர்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதி உருது முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும், இஸ்லாமியத் தொன்மங்கள் குறித்தும், நுண்கலை ஆர்வம் மிக்க இளைஞனொருவனின் மன இயல்புடன் பேச விழைகிறது. சுமார் 216 பக்கங்களில் விரியும் இப்பிரதியை நாவல் வகைமைக்குள் வைத்துப் பார்ப்பதில் நாவலாசிரியர்கள் பலருக்கும் தயக்கங்கள் இருக்கக்கூடும். இந்நூலை autofiction எனப்படும் சுயபுனைவு வகைமையில் சேர்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ ரமேஷ் பிரதனின் ‘அவன் பெயர் சொல்’ போன்ற பிரதிகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ என்னும் தலைப்பே கூட அத்தன்மையுடையதாகவே இருக்கிறது. பல பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள ரபீக்கின் ஓவியங்கள் இப்பிரதிக்கு கூடுதல் ஈர்ப்பை அளிப்பதாக உள்ளன. தமிழில் இஸ்லாமிய…

Read More

உண்மை சார்ந்தவை எல்லாமே பேரிலக்கியம்தான்…

நா. விச்வநாதன் மரணம் எல்லாவற்றையும் பாதுகாப்பாக மாற்றும் வாழும்போது புரியும் பாதுகாப்பின்மையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் சாதனையாளர் என்ற சொல் சிலநேரம் அலுப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. எளிய தளத்தில் இயங்கும் அசலானவர்களை அதிலிருந்து அந்நியப் படுத்திவிடும் அபாயம் இதில் இருக்கவே செய்கிறது. தி.க.சி. என்ற இனிய மனிதரின் மறைவு சாதனையாளர் என்ற வார்த்தைக்குப் புதிய பொருளைத்தருகிறது என்பதும் சரியானது. மரணம் ஒரு நிகழ்வு என்றாலும் சிலருக்கானது உலுக்கி எடுத்துவிடவே செய்கிறது. மிகப்பெரிய ஆளுமை எளிமையாக சிறியவர்களோடு கைகோர்த்துத் தோழமை பாரட்டியது நெகிழ்ச்சி தருவது. இது திகசியின் தனித்தன்மை. தி.க.சி.யின் நாட்குறிப்புகள் அப்படியொன்றும் பிரமாதமான பேரிலக்கியம் இல்லை என்பதைப் பேச வேண்டும். ஆயினும் அதிலிருக்கும் பதிவுகள் முக்கியமானது. அவை அவரது சிரத்தையைச் சொல்கின்றன. கிடைத்த வெற்றிகளையும் தோல்விகளையும் கம்பீரமாக விவரிக்கின்றன. ஒரு புதிய ரசனையையும் நம்பிக்கையையும் வாசகனுக்குள் ஏற்படுத்துகின்றன. தி.க.சியின்…

Read More