படித்ததில் பிடித்தது

1.மாவீரன் சிவாஜி கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன் பாரதி புத்தகாலயம் கோவிந்த பன்சாரேவின் சிவாஜி கோன் ஹே – புத்தகம், சிவாஜி ஒரு காவித் தலைவன் அல்ல. காவியத் தலைவன் என்பதை நிறுவுகிறது. சிவாஜியின் அரசியல் அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களையும் எப்படி ஒருங்கிணைத்தது என்பது இன்றைய மாட்டிறைச்சி – படுகொலைச் சூழலில் வாசிக்கும் நமக்கு, ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தோழர் பன்சாரேவின் சிகப்பு அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது. எளிய, கையடக்க விலை. மலிவுப் பதிப்பு இது. 2.வைரமுத்து சிறுகதைகள் வைரமுத்து / சூர்யா லிட்ரேச்சர், சென்னை கவிப் பேரரசு வைரமுத்துவின் முத்தான நாற்பது கதைகளின் தொகுப்பு இது. தூரத்து உறவு எனும் முதல் கதை ஏற்படுத்தும் பாதிப்புபற்றிக் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான கதைகள் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. யதார்த்தவாதக் கதைகளே. மண்வாசனை ததும்பும்…

Read More