வாசித்ததில் யோசித்தது

ஆயிஷா இரா நடராசன் 1.குழந்தைமை: புதிரும் அற்புதமும்                 மரியா மாண்டசொரி            தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன்   சாளரம் இத்தாலியக் கல்வியாளர் மரியா மாண்டசொரியின் பிரபலமான The Secrets of Childhood நூல் தமிழில் சக்தி காரியாலயம் மூலம் வைத்தீஸ்வரன் (இந்தியா வந்தபோது மேடம் மாண்டசொரியோடு உடன் பணியாற்றியவர்) தமிழாக்கம் செய்து 1949ல் வெளிவந்தது. மறுபதிப்பு இது. கல்வியில் புரளும் யாவரும் கற்கவேண்டிய அறிய புத்தகம். நமது தனியார் ஆங்கில பள்ளிகள் பல மாண்டசொரி முறைபடி நடப்பதாக விளம்பரம் செய்கின்றன. அது மோசடி என்பதை இதை வாசித்தால் அறியலாம். 2.குழந்தைகளுக்கான பாட்டு கதை நாடகம்              தொ.வ.கீதா  /  கோ.பழனி, தாரா புக்ஸ் தாய்மொழியில் கற்றலை சரளமாக்கிட, குழந்தைகளின் சொல்வளத்தை அதிகரித்து கற்பனை சக்தியை ஆழமாக்கும் சிறந்த முயற்சி. களஆய்வு செய்து சேகரித்த படைப்புகள்…

Read More