மூடுபனிச்சிறையில் வண்ணங்கள்

மெல்லியமிகமிகமெல்லியகலகக்குரல் நா. விச்வநாதன் தலைமுறைகள் தாண்டியும் பெண்களின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. காலந்தோறும் பெண்களின் நிலை என்ற சொற்பயன்பாடே சரியாக இருக்கும். பொருத்தமானதும்கூட. பெண் என்பவள் சுமக்கும் ஒரு சாதனம்தான். நல்லவைகளையோ, அல்லாதவைகளையோ ஏற்பதும் சுமப்பதும் பெண்கள்தாம். நிலஉடைமைச் சமூகத்தில் இதுதான் மேலான அறம். பெண் போகப் பொருள். அடுத்த படி நிலை குடும்பத்தை வழிநடத்துவது என்பதான மறைமுக வன்முறை. இந்திய மரபில் ஆண், பெண் சமநிலை இருந்ததே இல்லை. இந்த சமத்துவமற்ற தன்மையைப் பெருமையாகத் தூக்கிப் பிடிக்கும் வரலாறு. இந்தியப் பெண் சமூகம் என்பது இன்றளவும் அடிமைச் சமூகம்தான். ‘மூடுபனிச் சிறையில் வண்ணங்கள்’ என்ற இந்தி நாவலை மொழிபெயர்ப்பில் படித்தபோது இது மேலும் உறுதிப்பட்டது. பெண்களின் வீடு சிறைதான். இதமான முன்பனிச் சிறையில் இருந்தாலும் பெண்களின் முகங்கள் மங்கலாகவே தெரிகின்றன. பொலிவற்றதாயும்…

Read More