You are here
நூல் அறிமுகம் 

பாட்டிகளின் குரல்வளைகளில் கசிகின்ற கதைகள்…

கமலாலயன் நென்மேனி மேட்டுப் பட்டிக்கும், திண்டுக்கல்லுக்கு மிடையே ஓடும் வண்டிப்பாதை, வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு ஊர்களின் வழியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. பயண வழியினூடே மதுரையையடுத்த கீழக்குயில்குடி சமணமலையின் பாறைகள் சமைத்த செட்டிப்புடவினருகே, மாடுகள் இளைப்பாற வேணுமென வண்டியை நிறுத்திவிட்டு அந்த மலைக்குகையொன்றில் ஓய்வாக உடலைக் கிடத்தியிருக்கிறார் கோணங்கி என்கிற இளங்கோ. இந்த நவீன கலைஞன், எதற்கு இப்படிப் பழைய மாட்டு வண்டியிலேறி நொம்பலப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்ற கரிசனத்துடன் ஜாகிர்ராஜா வேறு வேறு பேருந்துகளேறிப் பயணப்பட்டுப் போய் கோணங்கியைச் சந்தித்திருக்கிறார். இரண்டு பேரும் சமதையான பலசாலிகள். எதைக் கேட்டால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைக்குமென்கிற சூட்சுமம் அறிந்த ஜாகிர்ராஜா கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.    தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களுக்கென்று நீண்ட காலமாய் ஒரு மரபான நேர்கோட்டு மொழியும், தேய்ந்து பழையவையாகிப் போய்விட்ட சொல்லாடல்களுமே புழக்கத்தில் இருந்து…

Read More
நேர்காணல் 

கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி…

கோணங்கி சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா  தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவம் மிக்க படைப்பாளி கோணங்கி. கரிசல் வட்டாரத்தில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. இவருடைய தாய்வழிப் பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞன். 1980களில் ஒரு இடதுசாரி எழுத்துக் கலைஞனாக  அறிமுகமான கோணங்கி,  மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாக இலக்கியப் பரப்பில் வலுவாகக் காலூன்றியவர். 1988ல் வேலையை உதறிவிட்டு கல்வராயன் மலையிலிருந்து Ôகல்குதிரை’ என்னும் சிறுபத்திரிகையைத் தொடங்கியதன் மூலம் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க அசைவுகளை உருவாக்கினார். Ôகல்குதிரை’ இதழ் மூலமாக தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ், மார்க்வெஸ் சிறப்பிதழ், உலக சிறுகதைச் சிறப்பிதழ் போன்றவை வெளிவந்து தமிழ் வாசகப்பரப்பின் எல்லைகளை விரிவடைய வைத்தன….

Read More
கட்டுரை 

கோணங்கிக்கு விளக்கு விருது

தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவம் மிக்க படைப்பாளி கோணங்கிக்கு இவ்வாண்டின் விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கரிசல் வட்டாரத்தில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த கோணங்கியின் இயற்பெயர் இளங்கோவன். இவருடைய தாய்வழிப் பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ். அப்பா சண்முகம், அண்ணன் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞன். 1980களில் ஒரு இடதுசாரி எழுத்துக் கலைஞனாக  அறிமுகமான கோணங்கி,  மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாக இலக்கியப் பரப்பில் வலுவாகக் காலூன்றியவர். 1988ல் வேலையை உதறிவிட்டு கல்வராயன் மலையிலிருந்து ‘கல்குதிரை’ என்னும் சிறுபத்திரிகையைத் தொடங்கியதன் மூலம் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க அசைவுகளை உருவாக்கினார். ‘கல்குதிரை’ இதழ் மூலமாக தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ், மார்குவேஸ் சிறப்பிதழ், உலக சிறுகதைச் சிறப்பிதழ் போன்றவை வெளிவந்து தமிழ் வாசகப்பரப்பின் எல்லைகளை விரிவடைய வைத்தன. கோணங்கி…

Read More