உடல் திறக்கும் நாடக நிலம் – 13: “தேவதைகளுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்மந்தம்”

ச. முருகபூபதி அருங்காட்சியத்தின் சூழலைப்போல உறைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைகளைப் குழந்தைகள் ஒரு போதும் விரும்புவதில்லை. ஏய் சத்தம் போடாதே ஏய் பேசாதே ஏய் அடிபட்டுச் சாகாதே போன்ற போலிஸை ஒத்தகுரல்களைக் கேட்டுச் சலித்துவிட்ட குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைத்தரக்கூடிய ஆசிரியர்களை எதிர்பார்த்தே எப்போதும் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். நான் எந்த ஊருக்கும் குழந்தைகள் நாடகம் உருவாக்க கிளம்பினாலும் வகுப்பறை நுழைந்ததும் இருக்கைகளைக் கலைத்து சதுரம் வட்டம் எதிரெதிர் எனப் பல வடிவங்களுக்கு மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பேன். எனது நாடக, கதை வகுப்புகள் என்றால் நான் வரும் முன்னரே உற்சாகக் குரல்களும் இருக்கைகள் களைத்துப் போடும் சப்தங்களும் கேட்கத் துவங்கிவிடும். இப்படி வாரம் ஒரு முறையாவது வகுப்பறைச் சூழல் மாறுவது குழந்தைகளின் கனவு சாத்தியம். ஒரு வகுப்பு முடிந்து மறுவகுப்புத் துவங்கும் வரை சப்தங்களின் இருப்பிடமாகவே தோன்றும் அப்படிப்பட்ட சூழலில்…

Read More