You are here

கதைகூறும் பொற்சித்திரங்கள்

கமலாலயன் குழந்தைகளின் மீதும், குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளின் மீதும் மக்களின் கவனம் சற்றே அதிகரித்து வரும் காலம் இது. படைப்பாளிகளின் பார்வைகளும் குழந்தை இலக்கியங்களின் பால் பதியத் தொடங்கியிருக்கின்றன. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான உதயசங்கரின் பங்களிப்பு, சமீபகாலமாகத் தமிழ்க் குழந்தையிலக்கியப் பிரிவிற்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. ‘கேளு பாப்பா கேளு’ குழந்தைப் பாடல் தொகுப்பிலிருந்து, மலையாள மொழியிலிருந்து சிறார் இலக்கியக் கதைகளின் மொழியாக்கத் தொகுதிகள் வரை _ கணிசமான புத்தகங்கள் உதயசங்கரால் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. கேரள மண்ணின் வளங்களுள், குறிப்பிடத்தக்க வளமென யாவரும் அறிந்தது இலக்கியம். குழந்தை இலக்கிய முயற்சிகளைப் பொறுத்தவரை, நிச்சயம் மலையாள மொழிப் படைப்பாளிகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டென்றே தோன்றுகிறது. கேரள மாநில குழந்தைகள் இலக்கியக் கழகம் மலையாள மொழியில் வெளியிட்ட 14 கதை நூல்களுடன்,…

Read More

ஒரு தோழியின் கதை

மதுசுதன் ஒரு தோழியின் கதைக்குள் நுழையும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி கொஞ்சம் பேசியாகவேண்டும்.ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்விசார் உளவியல் குறித்த ஆய்வுகள்,அறிவியல் புனைவுகள்,சிறார் இலக்கியம்,கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்துத் தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான இது யாருடைய வகுப்பறை தமிழக ஆசிரியர், மாணவர்கள், கல்விசார் அமைப்புகள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இத்தகையதொரு சூழலில் ஒரு தோழியின் கதை என்கிற இப்புத்தகத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறார் இலக்கியம் கொடுத்திருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு கதைப்புத்தகம் என்பதையும் தாண்டி நடுநாட்டு வரலாற்றையும்  அதனையொட்டிய  புனைவின் மூலம்  மிகச்சிறப்பான கதைகளை உருவாக்கி சிறுவர்களின் மனங்களை மட்டுமல்லாது மற்றவர்களின் வாசிப்பு  மனோநிலையையும் கவர்ந்திருக்கிறது இப்புத்தகம்.நெய்தல் நிலத்தையும் மருதநிலத்தையும் தன்னகத்தே கொண்டு பரந்து விரிந்துகிடக்கும்…

Read More