You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம்-10 ஆதிமொழியினைத் தேடித் தேடித் தொடரும் பயணம்

ச.முருகபூபதி குழந்தைகளின் நினைவுக் குகைகளில் எப்போதும் கிளம்பி பயணத்திற்கு காத்திருக்கும் ரயில் பெட்டிகளுக்கு உற்சாகமிக்க வசீகரம் எவரையும் ஈர்த்து விடக்கூடிய வல்லமை கொண்டது. அவை ஒருவர் சட்டையை ஒருவர் பின்னே பிடிப்பது போன்றும் இரு கரங்கள் கொண்டு நீள் செவ்வகத்தில் இணைத்து அதனுள் எல்லோரும் இருக்க சதா குழந்தைகளின் சிருஷ்டி நிலத்தில் ரயில்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கள் தெரு கிணத்து மேட்டு நாடகங்களுக்கு நடிக்கும் அன்றைய குழந்தை நடிகர்கள் பலரும் பல இடங்களிலிருந்து அன்றைய நாடகங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களுடன் இப்படிப்பட்ட விந்தையான ரயிலில் பயணித்து வந்து சேர்வது வழக்கம். சுப்பையா பிள்ளை பொட்டல் பால்யத்தின் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆங்காங்கே விளையாட்டும் பாட்டும் ஆட்டமும் நாடகமுமாக கனவுலகவாசிகளைப் போல உலவிக் கொண்டிருப்போம். பீட்டர்புருகலின், நிலப்பரப்பு காட்சி ஓவியத்தைப் போலவே…

Read More
நூல் அறிமுகம் 

ஜிமாவின் கைபேசி : கைபேசியின் அறிவியல் வினோத உலகம்

சுப்ரபாரதிமணியன் கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான் குண்டுகளின் அபாயம் என்றெல்லாம் கைபேசியை வர்ணிக்கிறார்கள். குழந்தைகள் பாடத்தைத்  தவிர்த்து விட்டு கைபேசியைக் கையாளுகிறார்கள். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரங்களைப் பெரும்பாலும்  தொலைக்காட்சி, கைபேசியுடன்தான் கழிக்கிறார்கள்.பிற தொற்று நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது போல் கைபேசியின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பின்  உச்சபட்ச சாதனைகளைக் கொண்டிருக்கும் கைபேசி தரும் உலகத் தகவல்களும் பயனும்  சொல்லி மாளாதபடி குவிந்து கிடக்கிறது.கைபேசி புனைவு இலக்கியத்தில் எப்படியாவது இணைந்து தன் பங்கைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.அப்படியான கற்பனையில் கொமாகோ இளங்கோவின் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார். மூன்றாம்…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள்

ச. முருகபூபதி கதைகள் குறித்த பல கதைகளை குழந்தைகளிடம் பகிர்ந்து நாடகமாடி உரையாடி சித்திரம் வரைந்து கொண்டிருந்த நாட்களில் புத்தகங்களும் எழுத்துக்களும் கதைசொல்லிகளும் உலகில் உருவாகி கதைகள் குழந்தைகளின் தாவரநிலை கொண்ட காதுகளை உணர் நரம்புகளை தழுவிக் கொண்டிருந்த நாள் அது. ஆதியில் மனிதன் எழுத முடிந்த வஸ்துக்களிலெல்லாம் எழுதினான். வனவிலங்குத் தோல்களிலும், இலைகளிலும், மரப்பட்டைத் துண்டுகளிலும் மிருக, மனித எலும்புகளிலும் மண்பாண்டங்களிலும் கற்களிலும், கோயில் சுவர்களிலும், தூண்களிலும், பாறைகளிலும் மற்றும் செப்பேடுகளிலும் எழுதினார்கள் என்பதை கதையாக்கிச் சொன்னபோது அவற்றில் ஈர்க்கப்பட்ட குழந்தைகள் இதுபோல தாங்களும் புதுப்பது பொருட்களில் கதைகள் எழுதி வருவதாக ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சொல்லி மறுவாரம் வெங்காயத்தோடுகள் பனங்கிழங்கின் உள் குருத்து பலவடிவ சருகுகள், பச்சை இலைகள் வெண்டைக்காயின் அறுங்கோண வடிவத்திலும் பச்சை திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், வேப்பம்பழ மஞ்சள் தோலிலும் மஞ்சள்…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

திருடர்களிடமிருந்தும் நம் காலத்திற்கான புதுவிதைகளை எடுப்போம்

ச. முருகபூபதி கேட்கும் படைப்புத் திறன் கொண்ட குழந்தைகள் இன்று உலகெங்கும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.  நுண்மையான கேட்டலே சரியான ஆசிரியரையும் கதை சொல்லிகளையும் உருவாக்குகின்றது. அதேபோல் குழந்தைகள் சொல்லுகிற கதைகளை, அனுபவப்படைப்புக்களை பெரியவர்களாகிய நாம் கேட்காதபோது, அவர்கள் வீட்டுச் சுவர்களையும், தண்ணீரையும், மரங்களையும், பொருட்களையும் உயிர்களாக்கி சதா அதனோடு கதைபேசத் துவங்கி விடுகின்றனர். குழந்தைகளின் சுய உரையாடல்களுக்கு நாம் என்று செவிசாய்த்து அமைதி எடுக்கின்றோமோ அன்றே குழந்தைமையின் விடுதலை உணரப்படும். இன்னமும் பெரியவர்களாகிய நாம் நம் வெறுமையான ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காகவும் அதீத அக்கறை என்ற பெயரில் நாள்தோறும் வீடுகளை வதைக் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம். பள்ளிக்குச் சென்றாலும் பல வழிகளில் தொடரும் சித்ரவதைகள், முதல் ஐந்து ‘ரேங்க்’கிற்குள் வாங்கும் குழந்தைகளுக்கான நெருக்கடி விநோதமான மன அழுத்தத்தை உண்டு பண்ணக்கூடியது. என்னிடம் அழுது புலம்பிய நண்பர் வெளியூர்களில் அலைந்து…

Read More
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம் – 4

 கதைபோடும்  சித்திரக்காரக் குழந்தைகள் ச. முருகபூபதி       சித்திரங்கள்: கே. பிரபாகரன் (வயது 4) உருவமற்ற அரூபக்கோடுகளால் சித்திரமிட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிகலைஞர்களெனும் குழந்தைகளே. வாடகை வீட்டின் மதில்களிலோ சொந்தவீட்டின் மதில்களிலோ தெருக்கள் தோறும் எவருமற்று சிதிலமடைந்த வீடுகளின் காரை உதிர்ந்த மதில்களிலோ பேசிக் கொண்டிருப்பவை குழந்தைகளால் உருவாக்கப்பட்ட சித்திரக் கோடுகளே. அவை கதைகளும் இசைமைகொண்ட மழலை மொழியும் குழைத்துக் கீறப்பட்ட கோடுகள். பெரியவர்கள் தம்மிடம் உரையாடி விளையாடிட விலகிய தருணங்களில் தன்னெழுச்சியாய் வந்த கதை சொல்லும் கலை சுமந்த கோடுகள். ஒவ்வொரு நாளும் பல்லுயிர்களைச் சுமந்த அக்கோடுகளுக்கு குழந்தைகள் தினம் தினம் புதுப்புதுக் கதைகளும் அர்த்தங்களும் தனியே பாடிக்கொண்டிருப்பார்கள். எல்லாக் குழந்தைகளும் சித்திரமிடும்போது கதையின் மந்திரங்களை  முனகிக் கொண்டிருப்பதாலேயே இப்பிரபஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு போயிருந்தேன். புது வீடு கட்டிய அரசு அலுவலர் அவர்….

Read More