குழந்தைகளைக் கொண்டாடுவோம்…

பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் பெருமளவில் பின்தங்கிய ஒன்றாகவே இந்தியக் குழந்தை உள்ளது… அதன் உலகம் வெறுமைமிக்கது.               – அமர்தியா சென் இதோ அடுத்த குழந்தைகள் தினம் வந்துவிட்டது. நேரு என்னவெல்லாம் செய்தார்… என்னவெல்லாம் சொன்னார்… என்பதிலிருந்து குழந்தைகள் கார்ட்டூன்… பள்ளி நிகழ்ச்சி, ஏன் எஃப்.எம் வானொலி கருத்து கேட்பது… குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்களின் டி.வி. நேரடி கேள்வி பதில்… அது இது என களமிறங்கப் பலரும் தயார்… ஸ்பான்சர் (அல்லது பவர்டு  பை) செய்ய சாக்லெட், ஐஸ்கிரீம், குளிர்பானம் முதல் பீஸா வரை தயாரிக்கும் கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் தயார்தான். ஆனால் இதெல்லாம் எந்தக் குழந்தைகளுக்காக? சராசரி பள்ளி நாளில் வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்… அதிலும் 100 பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் 43 பேர் எட்டாம் வகுப்பு வராமலேயே இடையில்…

Read More