You are here
நூல் அறிமுகம் 

நிர்ஜனவாரதி இருகரைகளிலும் ஆளற்ற ஒரு பாலம்

கமலாலயன் “நினைவுகளைத்தட்டி எழுப்பினால் கண்ணீர் ஊற்று பொங்கி வரும் வாழ்க்கை என்னுடையது. ஈரமாக இருக்கும் அந்த எழுத்துகளைப் பொருள் பொதிய காகிதத்தின் மீது வடிக்க என்னால் முடியுமா என்று தயங்கினேன். அதனால்தான் இத்தனை நாட்களாக முயற்சி செய்யவில்லை…” கோடேஸ்வரம்மாவின் தன்வரலாற்று நூலின் தொடக்கத்தில் அவரது  என் நினைவுகளில் மேற்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தான் ஒரு பெரிய ஆளோ, எழுத்தாளரோ இல்லை என்றும் சொல்கிறார். தெலுங்கில் அவர் தொடங்கினால் முடிக்கும் வரை கீழே வைக்க முடியாதபடி, அவருடைய எளிய, இதயத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வரும் சோக வெளிப்பாடுகளால் நாம் நிலைகுலைந்து போவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய சரிவும் குறித்து விருப்பு வெறுப்பற்ற ஆய்வு நூலை எழுத நினைப்பவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை மட்டும்அடிப்படையாக எடுத்துக்கொண்டால் அது முழுமையடையாது. தலைவர்களின் வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், நேர்காணல்கள்…

Read More
நூல் அறிமுகம் 

உம்மத்

பாரதி செல்வா “வாழ்வை சிக்கலானதாக, பெண்களின்  உலகம்  எப்போதும் மூடப்பட்ட சாளரங்கள் கொண்டதாகக் கட்டமைத்திருக்கும் சமூகத்தின் இறுக்கங்களைப் பதிவு செய்வதன் பிரயத்தனமாகவே இந்த நாவல் உங்கள் கைகளை வந்தடைந்திருப்பதாக நம்புகிறேன்.ஈழத்து சூழலில் போருக்குப் பின்னரான பெண்களின் எதிர்காலம்,போரில் பங்கேற்ற பெண்களின்  இயல்பு வாழ்வு என்பன சவால், ஏமாற்றம், துயரம், அவமானம், குற்ற உணர்வுகளின் கலவையாகத் தொடர்கின்ற நிர்பந்த சூழலே இன்னமும் நிலவுகிறது.” (உம்மத் நாவலின் முன்னுரையின் ஒரு பத்தி.) ஈழப் போருக்குப்  பிறகு எழுதப்பட்ட நாவல் உம்மத்.போரினால் ஏற்பட்ட அவலங்களையும், வலிகளையும் வேதனைகளையும் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.மூன்று பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு  கதைக் களம் உயிர் பெறுகிறது. தவக்குல், யோகலட்சுமி, தெய்வானை இவர்களே பிரதான கதா நாயகிகள். யோகலட்சுமி என்ற யோகா குடும்பத்தின் வறுமை மற்றும் புறச் சுழல் காரணமாக சிறுவயதில் பணிப் பெண்ணாக…

Read More

சென்னை புத்தகக்காட்சி புதிய வெளியீடுகள்

பாரதி புத்தகாலயம் இயக்கவியல் பொருள் முதல் வாதம்                                                                                                                 மாரிஸ் கான்போர்த் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி. செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் – பேராசிரியர் சி.டி.குரியன் | தமிழில்: ச.சுப்பாராவ் மார்க்சிய இலக்கிய விமர்சனம் –  டெரி ஈகிள்டன் தமிழில் அ.குமரேசன் கலையின் அவசியம் – எர்ணஸ்ட் ஃபிஷர் தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி அறுந்துபோன ரத்த நாளங்கள் – எடுவர்டோ காலியானோ தமிழில். எம்.ஆனந்தராஜ் தமிழர் வளர்த்த தத்துவங்கள் –  தேவ. பேரின்பன். பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். கோணங்கி நேர்காணல் | சந்திப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா மதினிமார்கள் கதை | கோணங்கி கொல்லனின் ஆறு பெண்மக்கள் | கோணங்கி சித்தார்த்தன் | ஹெர்மன்ஹெஸ்ஸே மலாலா: கரும்பலகை யுத்தம் | இரா. நடராசன் ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் – ஹெச்.ஜி.ரசூல்   NCBH…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

இசை என்கிற குசும்புக்காரன் தமிழில் 1995-க்குப் பிறகு கவிதையைப் பெண்கள் வளைத்துப் போட்டுக் கொண்டு சரமாரியாக வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி யில் உறைந்துபோன ஆண் கவிஞர்கள் மண்டை காய்ந்து என்ன செய்வதென விளங்கா மல் ஒப்புக்குச் சப்பாணி ஆடத்தொடங்கி விட்டனர். பலபேர் சிறுகதை எழுதத் தொடங்கினர். ஆயினும் கவிதைத் தொகுப்பு கள் வந்த மயமாயிருந்தன. கவ¤தை… ம்ஹூம்.  உறைந்து போனவர் களிலிருந்து உயிர்த் தெழுந்தவர்கள் சிலர். ஆனால் இசை வேறொரு திசையிலிருந்து தனது சகல குசும்புகளோடும் வந்தவர். ஏகத்துக்குக் கவிதையை உடைத்துக் குழைத்து நசுக்கிப் பிதுக்கி அவர் செய்து வைக்கிற சிலைகளில் என்னவோ ஒருவிதமான வசீகரம், கலைத்தன்மை கைகூடிவிடுகிறது. அவை வடிவம் குறித்துப் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் நவீன கவிதைக்கு என்ன வடிவம் வேண்டிக் கிடக்கிறது? கவிஞனின் உள்ளொளி ஒருநொடியில் பளீரென எங்காவது பொறித்தட்டினால் போதும். கவிதை ஜெயித்துவிடும்….

Read More

தூரத்துப் புனைவுலகம் – 9 கால்களிலும் கண் முளைத்த பறவை

ம. மணிமாறன் பழகிய பாதையினில் பயணிப்பவர்கள் பாக்கியவான்கள். சிக்கலில்லை. உருவாக்கிப் போடப்பட்டிருக்கிற தடத்தினில் புரண்டு விடாமல் சீராக இயங்குகிறவர்கள், வாழ்க்கையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்று அச்சப்பட்டு நிலைகுலையப் போவதில்லை. இப்படியானவர்களால் நிறைந்த இப்பெரு உலகினில் விலகி நின்று யாவற்றையும் உற்று நோக்குகிறவர்கள் தனித்தவர்கள். ஒவ்வொரு நொடியையும் துளித்துளியாக ஏற்று, அதனுள் இயைந்து கரைந்து வேறு ஒன்றாகத் தானும் மாறி புறத்தையும் கூட மாற்றிடத் துடிக்கிறவர்கள் அவர்கள். அப்படியானவர்களுக்கு வாழ்க்கை வரமா? சாபமா? என்றறிந்திட முடியாத புதிராகவே அமைந்து போகிறது. தனிமனிதர்களின் புதிர்சூழ்ந்த வாழ்வெனும் விளையாட்டு வடிவம் பெறுவதில் அவனுக்கு மட்டுமே பெரும் பங்கிருக்கிறது. அவனே அவனின் அனைத்திற்கும் கா£ரணமாகிப் போகிறான் என்பதை முற்றாக ஏற்றிட இயலாது. அவனுடைய உருவாக்கத்தில் அவன் ஊடாடித் திரியும் புறச்சூழலுக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான புறஉலகம் அவனுக்குள் இறக்கியிருக்கிற பேராற்றலை உணர்ந்து…

Read More

எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள் தான்….

சுகுமாரன் கேள்விகள்: கொங்குநாடன் நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதைவிட பற்றி எரிவது மேல் ஒருகணம் எனினும்… என்றெழுதிய சுகுமாரன் தமிழின் மிக முக்கிய கவிஆளுமைகளுள் ஒருவர். சுயபுலம்பல்களின் நாராசங்களுக்கிடையில் மென்குரலில் மறைந்திருந்து தனித்தொலிக்கும் இவரின் வரிகள் கவிதையின் ஜீவனை இன்னும் இழக்காதிருக்கிறோம் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துபவை. கோடைகால குறிப்புகள், பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம் ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற தலைப்பில் முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளது. கவிதைகளுடன் கட்டுரை, மொழிபெயர்ப்பு எனத்தொடர்ந்து இயங்கும் சுகுமாரனின் முதல் நாவல் வெல்லிங்டன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் ராணுவத் தேவைகளுக்காகவென்றே உருவாக்கப்பட்ட ஊர் வெல்லிங்டன். இங்குதான் சுகுமாறனின் பால்யகாலம் கழிந்திருக்கிறது. எனவே மிக உவப்புடன் அவரால் இந்நாவலைக் கையாள முடிந்திருக்கிறது. காலச்சுவடு இதழின் ஆசிரியரான சுகுமாரன் தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். நாவல் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு…

Read More