உடல் திறக்கும் நாடக நிலம் – 8 : மரப்பாச்சியும் தோற்பாவையும் அரக்குநிறக் கழுதையும்

ச. முருகபூபதி பொம்மைகள் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லும் நாட்களில் என் கரங்களில் விதவிதமான மரப்பாச்சி பொம்மைகள் துணையிருந்தன. அவற்றைத் தொட்டு ருசிக்காத குழந்தைகளை அன்று எண்ணிவிடலாம். தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இன்று கொலு எனும் பொம்மைகளின் நாளில் காட்சிப் பொருளாகிவிட்ட மரப்பாச்சி எனும் ஆண், பெண் பொம்மைகள் 50 வருடத்திற்கு முன் வரை குழந்தைகளின்  உடலோடு ஒட்டிக் கொண்ட உறுப்பு எனலாம்.  காய்ச்சல், தலைவலி உடல்வலி போன்ற சில உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் இம்மரப்பாச்சி பொம்மையினைத் தரையில் உரசி குழந்தைகளின் உடலில் தேய்ப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் சிறு நோய்கள் குணமாகி விடுகிறது. அப்படியொரு மருத்துவக்குணம் அதற்கு. தோற்றத்தில் சமண சிலைகளின் நிற்கும் நிலையினை ஒத்திருப்பதால் சரித்திர மருத்துவக்குணம் அதற்குச் சரித்திர…

Read More