You are here
மற்றவை வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

பெவிலியனில் காத்திருக்கும்  தலைகள் ஏறிய வாய் பார்த்து| எருக்கலாம் பால் வைத்து| முள்வாங்கியில் களைந்தெடுத்து விடுகின்ற| உன் பிரியம்தான்|முறிந்த முள் நுனியைப் |பூவின் இதழ்களாய் |மாற்றி விடுகிறது. ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில்   ஆசிரியராகப் பணியாற்றும் மாகா என்கிற மா.கார்த்திகேயன்  நீண்டகால இலக்கியவாசகர். படைப்பாளிகளுடன் வியந்து சினேகம் பாராட்டுபவர். தொடர்ந்த வாசிப்பும்,  வாழ்வனுபவங்களும்  மாகாவைக் கவிஞனாகப் பரிணாமம் கொள்ள வைத்துள்ளது. எல்லாப் படைப்பாளிகளும் இப்படித்தான் பிறப்பெடுக் கின்றனர். முதல் தொகுப்பென்று சொல்லிவிட முடியாத அளவிற்கு கவிதைகளில் முதிர்ச்சி தென்படுவதும், எதைக் கவிதையாக்குவது  என்பதில் மாகாவுக்குள்ள தெளிவும், அவரை வருங்காலத்தின் நம்பிக்கைக்குரிய  படைப்பாளிகளுள்  ஒருவராக நிறுத்துகிறது. மாகாவின் கவிதைகளில் தென்படும் கிராமத்து வாழ்வின் எச்சங்களைத்தான் இன்றைய நவீன கவிதை இழந்து தவிக்கிறது. நகர வாழ்வின் அவலங்களே இன்றையக் கவிதையின் கச்சாப்பொருளாகிவிட்ட சூழலில்  மாகா தன் கவிதையை ‘மண் எங்கும்…

Read More
நூல் அறிமுகம் 

பழமையின் புதிய கவி அவதாரம்

மு. முருகேஷ்   தமிழ் மரபின் செறிவோடும் புதுமையின் அழகோடும் தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதையின் சமூகத் தாக்கமும் புதுக்கவிதையின் அர்த்தமிக்க எளிமையையும் கைவரப் பெற்றவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோர்வுறாமல் எழுதிக் கொண்டிருப்பதும், புதுப்புதுக் கவிதை வடிவங்களை அறிமுகம் செய்து வருவதும் சற்றே சவாலான ஒன்றுதான். எண்பதாவது வயதில் கால் பதித்திருக்கிற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்த சவால்களை தனது உறுதியான இலக்கியக் கொள்கையாலும் எழுத்தின் சமூகத் தேவை குறித்த சரியான பார்வையாலும் வென்றெடுத்து நிற்பவர். ‘உலராது பெருகும் உலகின் விழிநீர்த் துடைக்க ஒரு விரல் தேவை’ என்கிற வரிகளில் ஒலிக்கிற மானுட விடுதலையை விரும்பும் கவிக்குரலும், ‘சுதந்திரத்தை என்னால் சாப்பிட முடியவில்லை சோறு கொடு…’ என்பதிலான மனிதநேயக் குரலும், இன்றைக்கும் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் விடாது…

Read More

மாமணியைத் தோற்றோம்

“இவரைப் பத்திரமாக பாதுகாக்கவேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் வேறுஎவரும் இல்லையா?” என்று மகாத்மா காந்தி ஒருமுறை ஆதங்கத்துடன் கேட்க நேர்ந்தது. பத்திரமாக பாதுகாக்க வேண்டுமென காந்தி கேட்டுக்கொண்டது பாரதியைத்தான். காந்திக்கு தமிழர்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாதுபோல. தமிழர்கள் சினிமா நடிகனுக்கானால் கோயில் கட்டுவார்கள். கும்பாபிஷேகம் நடத்துவார்கள். இலக்கியவாதிகள் அவர்களுக்கு மயிருக்குச் சமம். அதனால்தான் பாரதி எனும் மாமணியைத் தோற்றோம் என்று வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

Read More

தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி

களப்பிரன் தஞ்சையில் இலக்கியக்கூட்டத்திற்காகவே கட்டிவிடப்பட்ட இடம் போல இருக்கும் தஞ்சை பெசண்ட் அரங்கில், ஒரு மாலைப் பொழுதில் வழக்கத்தை விட கூட்டமாக ஒரு இலக்கிய நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது. அது ஒரு நூல் வெளியீட்டு விழா. அதுவும் கவிதை நூல் வெளியீட்டு விழா. பூங்கனல் எனும் இளைய பெண் கவிஞரின் முதல் கவிதைத் தொகுதிக்கான விழா அது. யார் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள் தெரியுமா? அந்தக்கவிஞரின் தந்தையும் கவிஞருமான இலக்குமிகுமாரன் ஞானதிரவியம். அனேகரும் தங்கள் பிள்ளைகளை ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ இந்த சமூகத்தில் அறிமுகம் செய்ய நினைக்கிற இந்த நாளில், தன் பிள்ளையை ஒரு கவிஞராக அவர் அறிமுகம் செய்தது சிறப்பு. அதுவும் பெண் பிள்ளை என்றால் அவளுக்கு எப்படியாவது திருமணம் ஒன்றை பிரம்மாண்டமாக நடத்துவது ஒன்றே வாழ்வின் லட்சியம் என்று நினைக்கும்…

Read More