You are here
தூரத்து புனையுலகம் 

கலையாத காற்றின் சித்திரங்கள்

ம.மணிமாறன் சொற்கள் யாவும் அர்த்தம் தருபவையே. தான் எழுதிச் செல்கிற வரிகளில் படர்கிற வார்த்தைகள் வலிமையானது, கூடற்ற ஒற்றைச் சொல்லைக் கூட நான்  எழுதுவதில்லை என்றே நினைத்துக் கொள்கின்றனர் எழுத்தாளர்கள். மனதிற்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல நான் எடுத்து எழுதிக்கோர்த்த சித்திரம் என்னுடைய படைப்பு என்ற பெருமிதம், எழுதுகிற எல்லோருக்குள்ளும் மிதந் தலைகிறது. மனதின் சொற்கள் காகிதங்களில் படிவதற்கான கால இடைவெளி  சில பல ஒளி ஆண்டுகள் தொலைவிலானது என்பதை பல சமயங் களில் எழுத்தாளனே புரிந்து கொள்கிறான். தனக்குள் சமாதானமாகி அடுத்தடுத்த பக்கங்களுக்குள் கரைகிற போது அவனுடைய போதாமை ஏற்படுத்திய சுமை எழுத்தாளனில் இருந்து மெதுவாக வெளியேறி விடுகிறது. உலகைப் புரட்டப் போகும் புத்தகம் இது என்கிற  அதீத துணிச்சலின்றி ஒரு படைப்பை உருவாக்கிட முடியாது தான். இருந்தபோதும் எப்போதோ, எழுதிப்பார்த்து சுகித்து ரசித்த விஷயங்கள்…

Read More

நான் எல்லாம் சாரில்ல.. சார்

பேரா. ந. மணி கடந்த ஒரு வாரமாகவே, டேவிட், டேவிட் என மனம் பதறிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள் அவர் பேசும் போதும் மனம் மேலும் மேலும் பதைபதைக்கிறது. அந்த மனிதனைப் பற்றிய நல்லெண்ணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு “சார் மணியா? நான் தூத்துக்குடியில் இருந்து டேவிட் பேசுகிறேன்” என்றார். ம். சொல்லுங்க என்றேன். “உங்க புக் இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி படிச்சேன்! ரொம்ப சந்தோசம் சார் நன்றி அந்த 25 குழந்தைகளில் பாரதி என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள். புக் படிச்சதில் இருந்து அவள் நெனப்பு அலைக்கழிக்கிறது சார்”. என்று மன ஆதங்கத்தை கொட்டினார். கல்வி உரிமைச் சட்டம் என்பது கல்வி மறுக்கப்பட்டவர் களுக்குத்தானே? கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏன் கல்வி மறுக்கப்பட்டது? இத்தகைய கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு…

Read More
நூல் அறிமுகம் 

கற்றுக்கொண்டே இருப்போம்!

இர.இரா.தமிழ்க்கனல் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தபோது மனதில் தோன்றிய சித்திரம், அதனுள்ளே புகுந்த பின்னர் மறைந்துவிட்டது. இப்படிப் படிப்பதற்கு முன்பே புத்தகம் பற்றிய காட்சிவுருவை உண்டாக்கியதில் அட்டைக்கும் ஒரு பங்கு இருக்கலாம். அது ஒரு பக்கம், இது என்ன புத்தகம்? 1979ஆம் ஆண்டைக் குழந்தைகள் ஆண்டாக அறிவித்த ஐ.நா., அதே ஆண்டை ஜேனஸ் கோர்ச்சாக்கின் ஆண்டாகவும் அறிவித்தது. உயிர்ப்பின் கடைசிநேரம் வரை குழந்தைகளின் பொருட்டே வாழ்ந்த அவரின் வார்த்தைகள்தான், இந்தப் புத்தகம்! இதில் அழுத்தமாகச் சொல்லப்பட்டு இருக்கும் பொருண்மைகள், ஒன்று கோர்ச்சாக்கின் குழந்தைகளுக்கேயான தவ வாழ்க்கை! மற்றது, குழந்தையை நேசித்தல் பற்றி ஓடையின் நீரோட்டம்போல தன் போக்கில் சொல்லிக்கொண்டே போகும் கவித்துவமான குறிப்புகள். ஆங்கிலத்தில் சாண்ட்ரா யோசப் என்பவர் எழுதிய ‘லவிங் எவரி சைல்ட்’ புத்தகத்தின் தமிழாக்கம் இது. மூலத்தில் கோர்ச்சாக்கின் ‘ஹவ் டு லவ் எ சைல்ட்’, …

Read More