உடல் திறக்கும் நாடக நிலம் – 9: ஞாபகவெளியில் கலையாதிருக்கும் கிணத்துமேட்டு நாடகங்கள்

ச. முருகபூபதி குழந்தைகளின் மனநிலத்தில் கதைகளின் தாதுக்கள் பதுங்கியிருப்பதைப் போலவே நடிப்பு மொழியின் பலவித உணர்நரம்புகள் சதா பறவைகளின் றெக்கைகளைப் போல அவர்களுக்குள் சடசடத்துக் கொண்டிருக்கிறது. அவர்களை கதைகளோடு ஒவ்வொரு முறையும் சந்திக்கின்றபோது என் உடலெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் அப்பி எழுதி கிறுக்கிச் செல்வதைப் போல தளிர் விரல்கள் என்னைத் தொட்டுத் தொட்டு தம் அகங்கையின் ரேகைகளை பூசிச் செல்லும். ஒரு விதத்தில் ரேகைகளான ஒப்பனைமுறை என்று சில நொடி மௌனத்தில் அவற்றை வணங்கி கதையின் பூமியைத் திறப்பேன். ஒவ்வொரு கதைகளுக்குள்ளிருந்தும் சில கதாபாத்திரங்களை என் உடலுக்கு இடமாற்றி உடல்மொழி பிசைந்த கதைகளாய் அவை நிகழ்கலை வடிவமெடுத்த பின் அவரவர்களுக்குப் பிடித்த பாத்திரங்களுக்குள் தம்மைப் புகுத்தி உடன் நடிக்கத் துவங்குவதை இதுநாள்வரை நேரடி அனுபவமாய் உணர்ந்து என்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றேன். பெரும்பாலான குழந்தைகள் கதைகளுக்குள் இருக்கும் னீஷீஸ்மீனீமீஸீtஐ…

Read More