You are here
நூல் அறிமுகம் 

நிர்ஜனவாரதி இருகரைகளிலும் ஆளற்ற ஒரு பாலம்

கமலாலயன் “நினைவுகளைத்தட்டி எழுப்பினால் கண்ணீர் ஊற்று பொங்கி வரும் வாழ்க்கை என்னுடையது. ஈரமாக இருக்கும் அந்த எழுத்துகளைப் பொருள் பொதிய காகிதத்தின் மீது வடிக்க என்னால் முடியுமா என்று தயங்கினேன். அதனால்தான் இத்தனை நாட்களாக முயற்சி செய்யவில்லை…” கோடேஸ்வரம்மாவின் தன்வரலாற்று நூலின் தொடக்கத்தில் அவரது  என் நினைவுகளில் மேற்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தான் ஒரு பெரிய ஆளோ, எழுத்தாளரோ இல்லை என்றும் சொல்கிறார். தெலுங்கில் அவர் தொடங்கினால் முடிக்கும் வரை கீழே வைக்க முடியாதபடி, அவருடைய எளிய, இதயத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வரும் சோக வெளிப்பாடுகளால் நாம் நிலைகுலைந்து போவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய சரிவும் குறித்து விருப்பு வெறுப்பற்ற ஆய்வு நூலை எழுத நினைப்பவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை மட்டும்அடிப்படையாக எடுத்துக்கொண்டால் அது முழுமையடையாது. தலைவர்களின் வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், நேர்காணல்கள்…

Read More
நூல் அறிமுகம் 

பாட்டிகளின் குரல்வளைகளில் கசிகின்ற கதைகள்…

கமலாலயன் நென்மேனி மேட்டுப் பட்டிக்கும், திண்டுக்கல்லுக்கு மிடையே ஓடும் வண்டிப்பாதை, வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு ஊர்களின் வழியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. பயண வழியினூடே மதுரையையடுத்த கீழக்குயில்குடி சமணமலையின் பாறைகள் சமைத்த செட்டிப்புடவினருகே, மாடுகள் இளைப்பாற வேணுமென வண்டியை நிறுத்திவிட்டு அந்த மலைக்குகையொன்றில் ஓய்வாக உடலைக் கிடத்தியிருக்கிறார் கோணங்கி என்கிற இளங்கோ. இந்த நவீன கலைஞன், எதற்கு இப்படிப் பழைய மாட்டு வண்டியிலேறி நொம்பலப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறான் என்ற கரிசனத்துடன் ஜாகிர்ராஜா வேறு வேறு பேருந்துகளேறிப் பயணப்பட்டுப் போய் கோணங்கியைச் சந்தித்திருக்கிறார். இரண்டு பேரும் சமதையான பலசாலிகள். எதைக் கேட்டால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைக்குமென்கிற சூட்சுமம் அறிந்த ஜாகிர்ராஜா கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்.    தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களுக்கென்று நீண்ட காலமாய் ஒரு மரபான நேர்கோட்டு மொழியும், தேய்ந்து பழையவையாகிப் போய்விட்ட சொல்லாடல்களுமே புழக்கத்தில் இருந்து…

Read More
நூல் அறிமுகம் 

கடவுளின் பெயரால் காமக்கூத்து

பொ. வேல்சாமி கி.பி.6, 7ம் நூற்றாண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் ஓரங்கட்டிவிட்டு சைவ, வைணவ சமயங்கள் முதல்நிலைக்கு வந்தன. இவ்விரண்டு வைதீக சமயங்களும் புதிதாக கோவில் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கின. அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட கோவில்களுடன் அந்தப் பகுதியை சுற்றி இருந்த விளைநிலங்களை இணைத்துக் கொண்டு அந்நிலங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் மீது தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தன. இதே காலக்கட்டத்தை ஒட்டி தமிழ்நாட்டில் சாதிகள் என்ற அமைப்பு உருவெடுத்து தன்னைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தச் சாதி அமைப்பில் உயர்சாதியினராகக் கருதப்பட்ட மிகச்சிலவான சாதிகள் அன்றைய அரசர்களுடனும் கோவில்களுடனும் தங்களை இணைத்துக் கொண்டு பெரும் பொருளாதார வளர்ச்சியையும் பெற்றன. 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசு அதிகாரம் பொருளாதார அதிகாரம் போன்றவற்றை  செம்மையாக நிலைபடுத்திக் கொண்ட இந்தச் சாதிகள் அடுத்தப்படியாக பெருவாரியான பெண்களைத்…

Read More